தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 25 februari 2013

ஜெனீவா கூட்டத்திற்கு மீண்டும் பல்டி அடித்த TNA !





ஈழத் தமிழர்கள் தலையில் மீண்டும் மிழகாய் அரைத்துள்ளார் சம்பந்தன் ஐயா அவர்கள். ஜெனிவா போகிறோம் ஆனால் போகவில்லை என்கிறார் அவர். என்ன புரியவில்லையா மக்களே ? நீண்ட காலமாக மார்ச் மாதம் தாம் ஜெனீவாவுக்குச் செல்ல இருக்கிறோம் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தெரிவித்து வந்தனர். இதனால் பல தமிழர்கள் ஓரளவு ஆறுதலாக இருந்தார்கள். ஆனால் முருங்கை மரத்தில் வேதாளம் ஏறியதுபோல, தற்போது சம்பந்தர் ஐயா அவர்கள் தாம் 2ம் திகதி ஜெனீவாவில் தமிழர்களால் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள மாநாட்டிற்கு தான் செல்கிறோமே தமிழர், மனித உரிமைக் கவுன்சில் மாநாட்டிற்குச் செல்லவில்லை என்று திட்டவட்டமாக இன்று அறிவித்துள்ளார். அதாவது தனக்கும் தமது அமைப்புக்கும் கிடைக்கும் அழுத்தங்களில் இருந்து தப்பிக்க, நாம் ஜெனீவா செல்கிறோம் என்று இவ்வளவு காலமும் மொட்டையாகத் தெரிவித்தார். இதனால் பலரும் எங்கே அவர் மனித உரிமைக் கூட்டத்துக்காகத் தான் செல்கிறார் என்று மனம் மகிழ்ந்தார்கள்.

ஆனால் இறுதியில் நான் அந்த மாநாட்டிற்குச் செல்லவில்லை, வேறு ஒரு மாநாட்டிற்கு தான் செல்கிறேன் என்று இன்று அறிவித்துள்ளார். எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பினர்( சம்பந்தர் கோஷ்ட்டி) ஜெனிவா மனித உரிமை கவுன்சில் மாநாட்டிற்குச் செல்லாது என்பது உறுதியாகிவிட்டது. எங்கோ இருக்கும் அமெரிக்கா தமிழர்களுக்கு ஆதரவாக ஜெனீவாவில், கூட்டம் போட, தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்று, தாம் தான் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என்று, மார்தட்டும் இவர்கள் அதனைப் புறக்கணிக்கிறார்கள். இதேவேளை 26ம் திகதி ( நாளை) பிரித்தானியா வரும் சம்பந்தர் ஐயாவின் கோஷ்டியினர் நிதி சேகரிப்பிலும் ஈடுபட இருக்கிறார்களாம் என்ற செய்திகளும் உலாவருகிறது. 

சிங்கக் கொடியை உயர்த்திப் பிடித்து காட்டிய சிங்காரவேலனுடன் உட்காந்து இராப்போனச விருந்து சாப்பிட 30 பவுன்டுகள் டிக்கட் அடித்தும் விற்கப்படுகிறது. பராக் ! பராக் ! பராக் ! சிங்கக் கொடி பிடித்த சிங்காரவேலன் பராக் !

Geen opmerkingen:

Een reactie posten