தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 februari 2013

ஜெனீவாவிற்கு ஏற்றவாறு ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்ய மாட்டார்: அமைச்சர் லக்ஸ்மன் யாபா


ஜெனீவாவிற்கு தேவையான வகையில் ஜனாதிபதி நாட்டை ஆட்சி செய்ய முடியாது என முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாட்டு மக்கள் அரசாங்கத்துடன் இணைந்திருக்கின்றனர். இதனால் சர்வதேச ரீதியில் சூழ்ச்சித் திட்டங்களை கட்டவிழ்த்துவிட்டு அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிக்கப்படுகின்றது.
இராணுவத்தினர் பலவந்தமாக ஆட்சியைக் கைப்பற்றிய பாகிஸ்தானில் இவ்வாறு ஆட்சி மாற்றம் செய்ய முடியும். எனினும், இலங்கையில் நிலைமை வேறு.
மக்களினால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கமொன்று ஆட்சி செய்து வருகின்றது. ஜெனீவாவிற்கோ அல்லது உலகின் வேறு நாடுகளின் தேவைக்கு அமையவோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி செய்ய மாட்டார்.
எரிபொருள் விலையேற்றத்திற்கும் சர்வதேச நாடுகளின் அழுத்தங்களுக்கும் தொடர்பில்லை. உலகின் ஏனைய நாடுகளிலும் இவ்வாறான பொருளாதாரப் பிரச்சினை காணப்படுகின்றது.
சீனாவின் பொருளாதார வளர்ச்சி 12 வீதத்திலிருந்து ஒன்பதாக வீழ்ச்சியடைந்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten