தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 februari 2013

இலங்கை போர்க்குற்றங்கள் உடன் விசாரிக்கப்பட வேண்டும்!- பிரித்தானிய பிரதமர் கமரூன் தெரிவிப்பு !



இலங்கையில் இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் உடன் விசாரிக்கப்பட வேண்டும். அத்துடன் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார்.
இன்று பிரித்தானியாவில் இடம்பெற்ற அனைத்து கட்சி உலக தமிழர் மாநாட்டில் அனுப்பி வைத்த வாழ்த்து செய்தியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் நிரந்தரமான சமாதானம் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதே பிரித்தானியாவின் விருப்பமாகும் என சுட்டிக்காட்டியுள்ள அவர் இலங்கையில் உள்ள அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து வந்தால் இலங்கையில் சமரசத்தை உண்டாக்கி அமைதியை காணலாம் என அவர் தெரிவித்துள்ளார். 
 நல்லிணக்கம், நீதி, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதன் மூலமே சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச மனிதாபிமான சட்டங்கள் மீறப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை உரிய முறையில் விசாரணை நடாத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
சாட்சிகளுடன் குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால், குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தான் பிரித்தானியாவில் வாழு தமிழர்களின் அபிலாசைகளை நிவர்த்தி செய்துள்ளதாகவும் அவர்கள் பிரித்தானியாவுக்கு செய்து வரும் பங்களிப்பு அளப்பரியது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmryCRbNYns1.html


UK Prime Minister calls for healing in Sri Lanka
[ Wednesday, 27 February 2013, 04:44.05 PM GMT +05:30 ]
British Prime Minister David Cameron has called on all parties in Sri Lanka to work together to heal the country.
In a message issued on the Global Tamil Forum’s (GTF) 3rd anniversary conference to be held in London today, Cameron said that his government wants to see lasting peace in Sri Lanka.
“For it to succeed any peace must be based on justice and the rule of law, an inclusive political settlement and reconciliation between all those affected by the war.
In particular it is important that Sri Lanka properly investigates alleged breaches of humanitarian and international law and that those responsible are held to account,” he said
http://eng.lankasri.com/view.php?223OY5Zc203OmBZc4e2yyOlJacaeeWAAaddecKMMU0acddlOe0e4d5BmA33024n5Ym42

Geen opmerkingen:

Een reactie posten