இலங்கை யுத்த மீறல்கள் குறித்து இந்தியா சுதந்திர விசாரணை கோரவேண்டும் பிரகாஸ் காரத்
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான – நம்பகமான – உயர்மட்ட விசாரணைகள் நடத்தப்பட இந்தியா வலியுறுத்த வேண்டும் என மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலர் பிரகாஸ் காரத் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,
“போரின் இறுதிக்கட்டத்தில் இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் மனிதஉரிமை மீறல்கள் குறித்து, சுதந்திரமான, நம்பகமான, உயர்மட்ட விசாரணைகள் நடத்தும்படி இந்தியா கோர வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.
ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் கூட்டத்தில், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரவுள்ள தீர்மானம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரகாஸ் காரத்,
“எந்த அடிப்படையில் பிரச்சினை எழுப்பப்படவுள்ளது என்றோ, தீர்மானம் எப்படிப்பட்டதாக இருக்கும் என்றோ என்னால் கூறமுடியாது. ஆனால் இந்தியாவின் நிலைப்பாடு இதுவாகத் தான் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten