தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 28 februari 2013

ஐ.நா மனித உரிமைச்சபையில் சிறிலங்கா வழமையான பல்லவியையே பாடியது : தமிழர்தரப்பு பிரதிநிதிகள் கருத்து !


ஜெனீவா-ஐ.நா மனித உரிமைச்சபை சிறிலங்காவுக்கு சாவால் மிகுந்த இராஜதந்திரக்களமாக மாறியுள்ள நிலையில் அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் கருத்துக்கள் பொய்கள் நிறைந்த வழமையான பல்லவியாகவே அமைந்திருந்ததென ஜெனீவாவில்உள்ள தமிழர்தரப்பு பிரதிநிதிகளில் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதன்கிழமை மூன்றாம்நாள் அமர்வில் இடம்பெற்றிருந்த சிறிலங்காவின் அமைச்சர் மகிந்த சமரசிங்கவின் உரையானது எதிர்பார்தது போல் சர்வதேசத்தினை திருப்பதிப்படுத்த புள்ளிவிபரங்களை அடுக்கிய உரையாகவே இருந்ததென தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பில் இந்தியாவில் இருந்து ஜெனீவா சென்றிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா மனித உரிமைச் சபைக்கான வளஅறிஞர் குழுவின் பிரதிநிதி பேராசிரியர் பொல் நியூமன் அவர்கள் கருத்துரைக்கையில் போருக்கு பிந்திய முழு இலங்கையின் அபிவிரித்தி வளர்ச்சி 8 வீதமென்றும் இதில் வடக்கின் வளர்ச்சி 27 வீதமென்றும் கூறப்பட்டது. இந்த 27வீத வளர்ச்சியில் பயன்அடைந்தவர்கள் வடக்கில் சென்று வியாபாரம் செய்கின்ற சிங்களவர்கள்தான் என்பது இதன்பின்னால் உள்ள உண்மை.
மேலும் 110 மைல் தொடருந்து பாதை போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொடருந்த பாதை தமிழர் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினரின் பயன்பாட்டுக்கு என்பது வெளிச்சத்துக்கு வராத விடயம்.
இதேவேளை சமீபத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையத்தினால் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் இலங்கையில் இன்னும் 93 ஆயிரம் அகதிகள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஐ.நாவின் இன்னுமொரு மையான மனித உரிமைச்சபையிலேயே வாய்கூசாமல் இலங்கையில் அகதிகள் என்று எவரும் இல்லை என்று வேடிக்கை.
இலங்கையில் இராணுவமயமாக்கல் என்று வெளியுலகில் பேசுகின்றார்கள். ஆனால் இலங்கையில் தற்போது இராணுவம் வீடு கட்டிக்கொடுத்தல் வீதி அமைத்துக் கொடுத்தல் என்று மக்களின் மேம்பாட்டு தேவைகளுக்காகவே பணியாற்றுகின்றதெனவும் கூறப்பட்டது.
இறுதியில் ஐ.நா மனித உரிமைச்சபை ஆணையாளர் மீதும் தனது கோபத்தினை காட்டியது சிறிலங்கா.இருப்பினும் எதிர்பார்தது போல் புள்ளிவிபரங்களை அடுக்கியிருந்த சிறிலங்காவின் உரை சர்வதேசத்தினை வசியப்படுத்துமா என்பதுதான இங்குள்ள கேள்வி.
- See more at: http://news.lankasri.com/show-RUmryCRbNYns5.html#sthash.RJx8ieTH.dpuf

Geen opmerkingen:

Een reactie posten