ஐநா செயலாளர் நாயகம் திரு பான் கீ மூனிடம் இரு மனப் போக்குக் காணப்படுவதாக செயதி வெளியாகியுள்ளது. சந்திரனிடம் மட்டுமல்ல சந்திரன் (மூன்) என்ற பெயர் கொண்டவர்களின் சிந்தனை கூட உணர்வு பூர்வமாகவும் திசை திருப்பப்படுகின்றதோ என்னமோ?
இதயம் மனம் சார்ந்தது. மூளையே அறிவு பூர்வமானது. விவேகமும் தந்திரமும் தான் உலகாயுதமானவை.
மகா பாரதப் போரையும் அதன் அழிவையும் எப்படி நிறுத்தலாம் என பாண்டவர்களில் தீர்க்கதரிசியான சகாதேவனிடம் கேட்டார்களாம்.
அதற்கு சகாதேவன் கிருஸ்ணரை பிடித்துக் கட்டினால் மட்டும் அது சாத்தியம் என்றானாம்.
உடனே கிருஸ்ணர் தனது மெஹா விஸ்வரூபத்தை காட்டி முடிந்தால் கட்டிப்பார் என்று வானளாவ வளர்ந்து நின்றாராம்.
விஸ்வரூபத்திற்கு மட்டுமல்ல எமது ஈழத் தமிழர் பிரச்சனையிலும் வேஷமிட்டு தடையாவது இந்தியாவே. .
குந்திதேவியை மட்டுமல்ல இந்தப் பான் கீ மூனிற்கும் “கீ” கொடுத்து மாற்றுவது இந்தியா தான்.
வெளிப்படையாக ஐநா சபையில் தமிழரிற்கான அமெரிக்காவின் தீர்மானத்தை மாற்றாது எதிர்க்காது இந்தியா வாக்களித்தாலும், திரை மறைவில் அத்தனை சதிகளையும் இந்தியா தான் தொடர்கிறது எனலாம்.
இதற்கு காங்கிரஸ் இந்தியா கலைஞரைப் பயன்படுத்தி தமிழக மக்களையும் இன்றைய மாநில அரசையும் கட்டுக்குள் வைத்துக் கொண்டு நகர்வதை, எத்தனை தமிழ் நெஞ்சங்களால் புரிந்து கொள்ள முடிகிறதோ என்னமோ?
எதையும் முன் நகர்த்த இயலாத போதும் இந்திய அதிகாரிகளுடன் பேச மறுத்து வந்த, முதல்வர் செல்வி ஜெயலலிதாவிடமிருந்து ஈழத் தமிழர் விவகார தமிழக “றிமூட்டை” பறித்து “டெசோ” மூலம் கருணாநிதியிடம் கொடுத்தது மத்திய அரசு தான்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசி அலறியது. கனடாவில் உள்ள ஒரு வானொலியின் அறிவிப்பாளர் தங்களது அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு வேண்டினார்.
இந்தியா சிறீலங்காவிற்கு எதிராக வாக்களிக்கும் என்ற இந்தியாவின் அறிவிப்பு அன்று தான் வெளியாகியிருந்தது. இதனை சந்தோஷத்துடன் ஒரு பெரியவரின் குரல் குறிப்பிட்டு விட்டு எனது கருத்தை கேட்டது.
தூக்கத்தில் இருந்தமையால் அதிகம் பேசாது சுருக்கமாக எப்படி விளக்கலாம் என்று யோசித்த போது மகா பாரதப் போரில் கிருஸ்ணர் தனது தனிமனித ஆதரவை பாண்டவரிற்கும், படைகளின் ஆதரவை கௌரவர்களிற்கும் கொடுத்தது ஞாபகம் வந்தது.
இந்தியா ஐநா சபையில் வெளிப்படையாக சிறீலங்காவை எதிர்த்து வாக்களித்தாலும் அதன் உள்ளார்ந்த ஆதரவு சிறீலங்காவிற்குத் தான் என்பதை சுருக்கமாக விளக்க, மகா பாரதப் போரில் கிருஸ்ணரின் ஆதரவு கால்மாட்டில் நின்ற அருச்சுனனிற்கும், படைகள் தலைமாட்டில் நின்ற துரியோதனனிற்கும் வழங்கப்பட்ட அதே இதிகாச காலத் தந்திரத்தை இன்றைய நவீன இந்தியா பயன்படுத்துவதைக் குறிப்பிட்டேன்.
அதாவது இந்தியா தனது றோ தலைவரை மகிந்தவுடன் பேச விட்டதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
இந்தியாவை தமிழக ஒட்டு மொத்த பூரண எதிர்ப்பால் தான் கட்டுப்படுத்த முடியும். அதாவது மாண்புமிகு முதல்வர் ஜெயலலிதாவின் எதிர்ப்பை எழுச்சியை லாவகமாக கலைஞரை வைத்து காங்கிரஸ் இந்தியா கையாள்கிறது. கட்டுப்படுத்துகிறது. குட்டுப்படும் நமக்கு இவை எல்லாம் எப்போது தான் புரியுமோ?
கடன் தீர்க்க வேண்டிய கலைஞர் பொய்யுரைத்த தலைமையுடன் உடன்பட்டல்லவா பயனிக்கிறார்.
சிறீலங்காவின் வேஷத்தை இந்திய மத்திய அரசு புரிந்து கொள்ளவில்லை என்கிற கலைஞர் இந்தித் திணிப்பு இந்தியாவின் வேஷத்தை புரிந்து கொண்டும் தமிழக மக்களையும் ஈழத் தமிழரையும் புலம்பெயர் தமிழரையும் தனது வேஷத்தால் ஏமாற்றுவதே உண்மை.
போட்டிகளால் காட்டிக் கொடுபடும் இனம் நமது தமிழ் இனம். இங்கு இறுதியாக கனடாவில் வாழந்து மறைந்த சட்டத்தரணி எஸ் கே மகேந்திரன் என்று முடியும் எங்களது போட்டிகள் என்று ஒரு புத்தகமே எழுதியிருந்தார்.
தமிழரசுக் கட்சி - தமிழ்க் காங்கிரஸ் காலத்திலிருந்து வரும் இந்தக் காட்டிக் கொடுக்கும் போட்டிகள் இறுதிவரை “நெடியவன் - கே பி “ மற்றும் கருணா, தமிழ்ச் செல்வன், பொட்டம்மான் என்ற போட்டிகளாகி , நமது போராட்டத்தையும் பலவீனப்படுத்தி போராளிகளையும் தளபதிகளையும் தலைவரையும் அழித்து அவரின் பாலகன் பாலச்சந்தினையும் அழிக்க காரணமாகி விட்டதா?
கலைஞரிற்கு உண்மையில் தமிழ் இனத்தில் அக்கறை இருக்குமாயின் இன்றாவது காங்கிரஸ் இந்தியாவிற்கான ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும்.
இந்தியா தான் ஐநாவில் ஈழத் தமிழரை தமிழகம் காரணமாக பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும். அதனை இந்தியா செய்யாவின் ஈழத் தமிழரிற்கான பிரதிநிதித்துவம் ஒன்று ஐநாவில் தேவை என்ற கோரிக்கை இன்றைய நாட்களில் கருக்கட்ட வேண்டும். இதனைச் “ சம்பந்தப்பட்டவர்கள் “ கவனத்திற் கொள்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் உணர்ச்சி முதலீட்டு ஆர்ப்பாட்டக் கோச அரசியலில் சக்தியையும் காலத்தையும் கரைப்பதை விட்டு, வெள்ளைக் கொடியோடு முள்ளிவாய்ககாலுள் நின்று அவர்கள் கேட்டபடி இராஜதந்திரப் பாதையில் புலம்பெயர் தமிழர்கள் நகர முயல வேண்டும்.
தெரியாதுவிடின் அவ்வாறு நகர்பவர்களை ஆதரிக்க வேண்டும். அநத மனப் பக்குவமும் இல்லை எனில், கடைசி எதிர்க்காமல் ஆவது இருக்க வேண்டும். இது தான் தமிழ்த்தாயின் இன்றைய எதிர்பார்ப்பாக இருக்க இயலும்.
http://www.tamilwin.net/show-RUmryCRbNYnq3.html
Geen opmerkingen:
Een reactie posten