சற்று நேரத்திற்கு முன்னதாக , உலகத் தமிழர் பேரவையின்(GTF) மாநாட்டிற்கு வருகை தந்த பிரித்தானியாவின் துணைப் பிரதமர், சனல் 4 கின் யுத்த தவிர்ப்பு வலைய ஆவணப்படத்தைப் பார்வையிட்டார். தாம் அதிர்ச்சியில் உறைவதாகத் தெரிவித்த அவர், இலங்கையில் நடைபெற்ற கொலைகளுக்கு விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தெரிவித்தார். இதேவேளை பிரித்தானியாவின் எதிர்கட்சி தலைவர் எட்- மிலபான் அவர்களும் வருகை தந்தார். ஆக மொத்தத்தில் பிரித்தானியாவில் உள்ள 3 பெரிய கட்சிகளின் தலைவர்களும் இன்றைய கூட்டத்துக்கு சமூகமளித்து, இலங்கையில் சர்வதேச விசாரணை நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்கள். இது தமிழர்களுக்கு கிடைத்திருக்கும் மாபெரும் வெற்றியாகவும், ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க மாநாடாகவும் கருதப்படுகிறது.
பிரித்தானியாவின் துணைப் பிரதமர், சனல் 4 கின் காணொளியைக் காணும்போது எடுக்கப்பட்ட வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4618
Geen opmerkingen:
Een reactie posten