தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 27 februari 2013

இலங்கை தூதரகம் முன் வாசல் கதவை உடைத்த மலேசிய தமிழர்கள்!


இன்று மலேசியா தலைநகரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தூதரம் தமிழர் உதவும் கரங்கள் ஏற்பாடு செய்யப்பட்ட போராட்டத்தில் பல அமைப்புக்களும் பெருந்திரளான மக்களும் கலந்து கொண்டனர்.
தமிழீழத் தேசியத் தலைவரின் இளைய மகனை சிங்களப் பயங்கரவாத அரசு 12 வயது சிறுவனை காட்டுமிராண்டித் தனமாக சுட்டுக் கொன்றதை மலேசியாவில் உள்ள தமிழ் மக்களின் உள்ளத்தில் ஆழமாக பதிந்துள்ள பாலச்சந்திரனின் மரணச் செய்தி அறிந்து தமிழர் உதவும் கரங்களும் மலேசியா தமிழர் முன்னேற்ற இயக்கமும் சில அரசியல் கட்சிகளும் அமைதிப் பேரணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வேளையில் காவல்துறை குறுகிய நேரத்தில் கலைந்து செல்ல வேண்டும் என்று இட்ட கட்டளையால் பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு காவல்துறையின் அராஜகத்தால் இரு தரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
அமைதிப் பேரணியில் கலந்து கொண்ட 3 பேரை கைது செய்ததால் மக்களுக்கும் காவல்துறையினருக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
100 மேற்பட்ட காவல்துறையினர் இருந்த போதும் தமிழர் உதவும் கரங்கள் தலைவர் முரளி இலங்கை தூதரகத்தை சங்கிலி போட்டு பூட்ட முயன்ற போது காவல்துறையினர் தாக்க முற்பட்டதால் மக்கள் இலங்கைத் தூதரகத்தை தாக்கினார்கள்.
இதனால் இலங்கை தூதரக முன் வாசல் கதவு உடைக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரையும் விடுதலை செய்யுமாறு மக்கள் மறியலில் ஈடுபட்டதால் பதட்டம் அடைந்த காவல்துறையினர் மூவரையும் விடுதலை செய்தார்கள்.
இலங்கைத் தூதரகத்தில் பறந்து கொண்டிருந்த இலங்கை கொடியை பயத்தில் அகற்றி விட்டார்கள்.
- See more at: http://www.tamilwin.net/show-RUmryCRbNYnr2.html#sthash.GtmAbO6B.dpuf

Geen opmerkingen:

Een reactie posten