தலைவர் குடும்பம் எங்கே….? புதிய போர்குற்ற ஆதாரம் (படங்கள்)
VaakaiTV 27.02.2013 http://www.livestream.com/
2009ம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் இராணுத்திடம் சிக்கிக்கொண்ட பெண் போரளிக்ளை இலங்கை இராணும் விசாரிக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. தேசிய தலைவரது குடும்ப புகைப்படங்கள், மற்றும் புதிதாக எடுக்கப்பட்ட பொட்டம்மானின் புகைப்படங்களைக் காட்டில் அவர்களில் எவரையாவது நீங்கள் எங்கேயாவது பார்த்தது உண்டா என இலங்கை இராணுவம் மிரட்டி விசாரிக்கிறது. அதுமட்டுமல்லாது சாள்ஸ் அன்டனியின் புகைப்படங்களைக் கூட காட்டி, அவரை எங்கேயாவது பார்த்தது உண்டா என்று பெண் போராளிகளிடம் கேட்க்கிறது இலங்கை இராணுவம். சில இடங்களில் இவர்களை நேரடியாக மிரட்டி அழவைக்கும் காட்சிகளும் புகைப்படத்தில் பதிவாகியுள்ளது. இவற்றில் சில புகைப்படங்கள் ஐ.நா மனித உரிமைச் சபைக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
2012ல் என்னை கற்பழித்தார்கள்: பெண்ணின் வாக்குமூலம் !
VaakaiTV 27.02.2013 http://www.livestream.com/ vaakai
மனித உரிமைக் கண்காணிப்பகம் 141 பக்க அறிக்கை ஒன்றை இன்றைய தினம்(26) வெளியிட்டுள்ளது என VaakaiTV அறிகிறது. 2006ம் ஆண்டு காலப் பகுதி முதல் 2012ம் ஆண்டு காலப்பகுதிவரைக்கும் உட்பட்ட பகுதியில், தமக்கு கிடைக்கப்பெற்ற 75 முறைப்பாடுகளை அவர்கள் பதிவுசெய்துள்ளார்கள். இக் காலப் பகுதிக்குள் பல ஆயிரக்கணக்கான கற்பழிப்புகள் இடம்பெற்றிருந்த போதிலும் , தமக்கு முறைப்படி கிடைத்த புகார்கள் 75 தான் என கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. புலிகளுக்கு உதவியதாக குற்றஞ்சாட்டப்பட்டு, கைதானா ஒரு இளம் தமிழ் பெண்ணை கொண்டுசென்ற இலங்கை இராணுவம் அவரைச் சித்திரவை செய்துள்ளார்கள். பொலித்தீன் பை ஒன்றை எடுத்து, அதனுள் பெற்றோலை விட்டு, அப் பொலித்தீன் பையை இப் பெண்ணின் தலையில் கட்டியுள்ளனர். இதனால் அவர் மூச்சை இழந்து மயங்கி விழுந்துள்ளார்.

சில மணி நேரம் கழித்து தான் மயக்கத்தில் இருந்து எழுந்தவேளை, தாம் ஒரு இருட்டறையில் அடைக்கப்பட்டு இருப்பதாக அப்பெண் கூறியுள்ளார். பின்னர் தன்னிடம் வந்த 2 சிங்கள அதிகாரிகள் தன்னை பாலியரீதியாக துன்புறுத்தியதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். பின்னர் இரவு வந்த மேலும் 2 அதிகாரிகள் தன்னை கற்பழித்ததாகவும் அவர் கண்ணிர் மல்கத் தெரிவித்துள்ளார். இவரது கூற்று காணொளியாக இணைக்கப்பட்டுள்ளது.
இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்களின் ஒருவர், நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார். ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இலங்கை அரசை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
http://www.youtube.com/ watch?v=P5WN4KKn-po&feature =youtu.be
இலங்கை இராணுவத்தால் கற்பழிக்கப்பட்ட பெண்களின் ஒருவர், நேர்காணல் ஒன்றையும் வழங்கியுள்ளார். ஜெனீவாவில் மனித உரிமைக் கவுன்சிலின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், மனித உரிமைக் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கை இலங்கை அரசை மேலும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது.
http://www.youtube.com/
Geen opmerkingen:
Een reactie posten