தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 23 februari 2013

கே.பியின் கைது ! புலிகளை முற்றாக ஒழிக்கும் என கனவுகண்ட அரசு !


கே.பியை கைதுசெய்துவிட்டால், புலிகள் முற்றாக அழிக்கப்பட்டு விடுவார்கள் என்று இலங்கை அரசு எண்ணியுள்ளது. இது தொடர்பாக அமைச்சர் பாலித கோகன்ன அமெரிக்க தூதுவருக்கு தெரிவித்த கருத்துக்கள் அனைத்தும் தற்போது, விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது. சரி இலங்கை அரசு அப்படி என்ன தான் நினைத்தது என்று பார்க்கலாம் வாருங்கள் !

2009ம் ஆண்டு மே மாதம் புலிகளை யுத்த ரீதியாக இலங்கை அரசு வெற்றிகொண்டது. இருப்பினும் வெளிநாட்டில் வாழ்ந்துவந்த கே.பி விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஒரு அரசியல் அமைப்பாக மாற்ற முற்படுவதாகவும், அவரே புலிகளின் நிதிப் பிரிவை கையாண்டு வருவதாகவும் இலங்கை அரசு நம்பியது. இதன் காரணமாக இலங்கை அரசு அவரைக் கைதுசெய்ய பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் திகதி, கே.பியை மலேசியாவில் வைத்து இலங்கை அரசு கைதுசெய்தது. (இருப்பினும் கே.பி தான் சரணடைந்தார் என்று , சிலர் இன்றுவரை அடித்து கூறுகிறார்கள்) அது ஒருபுறம் இருக்க...

கே.பி கைதுசெய்யப்பட்டு, மலேசியாவில் இருந்து பாங்கொக் கொண்டுசெல்லப்பட்டுள்ளார். மலேசியாவில் இருந்து ஒருவரை இலங்கைக்கு நாடு கடத்த , இந்த இரு நாடுகளும் ஏற்கனவே ஒப்பந்தத்தில் கைச்சாத்திடவில்லை. இதன் காரணமாக மலேசியாவில் இருந்து நேரடியாக கே.பியை இலங்கைக்கு கொண்டுசெல்லவில்லை. முதலில் பாங்கொக் கொண்டுசெல்லப்பட்டு பின்னர் தான் கொழும்புக்கு கொண்டுசென்றார்கள் இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர். கே.பி கைதாகி கொழும்புக்கு கொண்டுசெல்லப்பட்ட பின்னர், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரைச் சந்தித்த பாலித கோகன்ன, புலிகள் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும், கே.பியின் கைதோடு எல்லாம் நிறைவுபெற்றுவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார். கே.பியிடம் தான் புலிகளின் பெருந்தொகையான பணம் முடங்கிக் கிடப்பதாகவும் பாலித கோகன்ன மேலும் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் அரசாங்கத்தின் இந்தக் கணக்கு தான் பிழையாகி, பிசு பிசுத்துப்போனது. காரணம் என்னவென்றால், கே.பியைக் கைதுசெய்தால் புலிகளின் மற்றும் அதன் முன்னணி அமைப்புகள் அனைத்தின் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கிப்போகும் என இலங்கை அரசு தப்புக் கணக்கு போட்டுள்ளது. ஆனால் பிற்காலங்களில் இலங்கை அரசு இதனை நன்கு உணர்ந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. புலிகள் அமைப்பில் உள்ள எந்த தலைவரைப் பிடித்தாலும், அவ்வமைப்பானது அவர்கள் இழப்பில் முடங்கிவிடாது என்பதும், அதன் சர்வதேச வலையமைப்பும், அதன் கட்டமைப்பும் பின்னர் தான் இலங்கை அரசுக்கு புரிந்திருக்கும். ஆனால் பாலித கோகன்ன தெரிவித்த கருத்துக்களை அப்படியே தமது தலைமைக்கு பாதுகாப்பான கேபிள் மூலம் அனுப்பியுள்ளார், கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவர். இத் தகவலானது 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 7ம் திகதி பரிமாறப்பட்டுள்ளது. இதனை விக்கி லீக்ஸ் தவுகளாக சேமித்துள்ளது. 

இத் தரவுகளை, அதிர்வு இணையம் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது:



http://athirvu.co.uk/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4591

Geen opmerkingen:

Een reactie posten