நாட்டின் அரசியலமைப்பை மீறும் வகையில் இலங்கைக்கு எதிராக ஜெனீவா செல்லும் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணி சபாநாயகரை கோரியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 22 வது கூட்டத் தொடரில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்கேற்க இருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்துத் தெரிவித்த தேசிய சுதந்திர முன்னணி அரசியல் பீட உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான பியசிரி விஜேநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் தனிநாடொன்றை உருவாக்குவதற்கு உதவும் வகையில் சம்பந்தன் அடங்கலான குழு செயற்படுகிறது.
இம்முறை கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைக்க உள்ள பிரேரணையினூடாக ஐ.நா. பிரதிநிதிகளுக்கு தடையின்றி நாட்டிற்குள் வரவும் யுத்தக் குற்றச்சாட்டு தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்தவும் இடமளிக்க அனுமதி கிடைக்கும்.
பிரித்தானிய பாராளுமன்றத்தில் இலங்கைக்கெதிரான மாநாட்டை உலகத் தமிழ் பேரவை நடத்த உள்ளது. இதில் சம்பந்தன் அடங்கலான குழு பங்கேற்க உள்ளது.
நாட்டை துண்டாடும் இத்தகைய மாநாட்டிற்கு பிரித்தானியாவில் அனுமதி வழங்கியது தொடர்பில் எமது கடும் கண்டனத்தை தெரிவிக்கிறோம் என்றார்.
Geen opmerkingen:
Een reactie posten