தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 20 februari 2013

பிஸ்கட் சாப்பிடக் கொடுத்துவிட்டு சுட்டுக் கொலை !





(3ம் இணைப்பு)


விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களின் மகன் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தவேளை, அவரை ஒரு பகுதுங்கு குழிக்கு ஓராமாக அமரச்சொல்லியுள்ளது இராணுவம். பாலச்சந்திரனுக்கு பிஸ்கட் பக்கட் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதனை அவர் உண்ணும்போது, அவர் பிறிதொரு இடத்தை பார்த்துக்கொண்டு இருப்பதை நீங்கள் புகைப்படத்தில் காணலாம். குறிப்பிட்ட அவ்விடத்தில் விடுதலைப் புலிகளின் பிற முக்கியஸ்தர்கள் சிலரையும் இலங்கை இராணுவம் விசாரித்துக்கொண்டு இருந்திருக்கிறது. பின்னர் அவர்கள் அனைவரையும் ஒன்றன் பின் ஒன்றாகச் சுட்டுள்ள இலங்கை இராணுவத்தின் 53 படைப்பிரிவினர். இறுதியில் பாலச்சந்திரன் பக்கம் திரும்பியுள்ளார்கள்.

பாலச்சந்திரனின் முதுகில் இராணுவத்தினர் சுடவில்லை. மாறாக அவரின் முன் நெஞ்சில் சுட்டுள்ளார்கள். அதுவும் இடதுபுறமாக மிகவும் நிதானத்துடன் சுட்டுள்ளார்கள் இராணுவத்தினர். இடது புறமாக(இதயம் இருக்கும் பக்கம்) 2 சூடுகளும், மேலும் வலது புறமாக 2 சூடும், அவர் உடலில் தெளிவாகக் காணப்படுகிறது. தன்னை இலங்கை இராணுவம் கொலைசெய்யப் போகிறது என்ற விடையம், பாலச்சந்திரணுக்கு இறுதியாகவே தெரிந்திருக்கும் என நம்பப்படுகிறது. பிஸ்கட்டை சாப்பிடக் கொடுத்துவிட்டு பின்னர் ஈவு இரக்கம் இன்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள்.

இராணுவத்திடம் சரணடைந்த பாலச்சந்திரனை ஏன் அந்த இடத்திலேயே சுடவில்லை ? அவர் சரணடைந்து சுமார் ஒன்றரை மணி நேரம் கழித்தே கொல்லப்பட்டிருக்கலாம் என்று, வீடியோவை ஆதாரம் காட்டி செய்திகள் வெளியாகியுள்ளது. பாலச்சந்திரனை தமது பிடியில் வைத்திருந்த இராணுவத்தினர், கொழும்பில் உள்ள தமது தலைமையோடு தொடர்புகளை மேற்கொண்டுள்ளார்கள். அங்கிருந்து கிடைக்கப்பெற்ற உத்தரவின் பெயரிலேயே பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருக்கிறார். எனவே அதிபர் மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்புச் செயலர் கோட்டபாய ராஜபக்ஷ, மற்றும் இராணுவத்தளபதி ஆகியோரே இக் கொலையின் சூத்திரதாரிகள் என்பது புலனாகிறது. 

பின் குறிப்பு: இலங்கையில் இருந்து தப்பிவந்த 2 இராணுவ உயரதிகாரிகளிடம், பாலச்சந்திரன் கொலை தொடர்பாக கேள்விகளைக் கேட்டுள்ளது சனல் 4 தொலைக்காட்ச்சி. அவர்கள் தெரிவித்த கருத்துக்களுக்கு அமைவாக பாலச்சந்திரன் மற்றும் அவருடன் சென்ற 5 மெய்பாதுகாப்பாளர்கள் அனைவரையும் இராணுவம் கொலைசெய்து, பின்னர் எரித்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்கள் அவர்கள்.


(2ம் இணைப்பு)

விடுதலைப் புலிகளின் தலைவர், பிரபாகரன் அவர்களின் கடைசி மகன் இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்டார் என்ற செய்திகள் ஏற்கனவே வெளியாகியிருந்தது. ஆனால் அது தலைவரின் மகன் அல்ல என்று முதலில் இராணுவம் தெரிவித்தது. பின்னர் அது தலைவரின் மகன் தான் என்றும் இருப்பினும் சண்டை நடந்தவேளை, இடையே மாட்டி அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கோத்தபாய கருத்து தெரிவித்திருந்தார். ஆனால் 5 மெய்பாதுகாப்பாளர்களோடு, இலங்கை இராணுவத்திடம் சரணடைந்துள்ளார் தலைவரின் மகன் பாலச்சந்திரன். அவரை இலங்கை இராணுவமானது ஒரு இடத்தில் இருத்திவைத்துள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. பிறிதொரு இடத்தில் நடக்கும், விசாரணைய பாலச்சந்திரன் உற்றுப்பார்த்துக்கொண்டு இருக்கும் காட்சிகள் தற்போது அதிர்வு இணையத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.

இவருடன் வந்த நபர்களை சுட்டு படுகொலைசெய்த இராணுவம், மேலும் சில முக்கிய நபர்களையும் அவர்களின் மனைவிமாரையும் சுட்டுக்கொன்றிருக்கிறார்கள். இறுதியாக பலச்சந்திரனையும் அவர்கள் ஈவு இரக்கம் இன்றி சுட்டுக்கொன்றுள்ளார்கள். பாலச்சந்திரன் சரணடைந்து , உயிரோடு இராணுவத்தின் பிடியில் உள்ளதை அதிர்வு இணையமானது தற்போது வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிகச் செய்திகள் விரைவில் வெளியாக உள்ளது. பாலச்சந்திரன் மற்றும் ஏனைய முக்கியஸ்தர்களை இலங்கை இராணுவம் சுட்டுக் கொன்ற வீடியோக் காட்சிகளும் விரைவில் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.




Geen opmerkingen:

Een reactie posten