தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 februari 2013

அட்ரா சக்கை !!அற்புதமான கேள்வி!! ஏன் முள்ளிவாய்க்கால் தொடர்பாக படம் எடுக்கவில்லை ?


அட்ரா சக்கை !!அற்புதமான கேள்வி!!இப்படியா உலகப்பயங்கரவாதிகள் தங்களை நியாயப்படுத்துவது, நம்மாக்களும் தப்புத்தாளம் போடுறது??முள்ளிவாய்க்கால் தமிழன் கொல்லப்பட்ட பிரச்சனை ,சிங்கள தமிழர் யுத்தம்,உலகக்கொலைகாரர் குற்றம் பற்றி படம் எடுத்தால் குற்றவாளிகள் இப்படி கேட்பதும் வல்லிபுரத்தான் சந்தோசமடைவதும் புரியாத புதிர்தான்!!
ஆஹா கமலகாசனிடம் சில கேள்விகளை முஸ்லீம் சகோதார்கள் கேட்டிருக்கிறார்கள் பாருங்க ! அதுக்கு ஆன்சரே பண்ண முடியாது ! தமிழகத்தில் விஸ்வரூபம் படத்துக்கு திரும்பவும் தடை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உலக நாயகன் மிகவும் மன வேதனையில் இருக்கிறாராம் ! தமிழகத்தையும் ... ஏன் இந்தியாவைக் கூட விட்டு விட்டு வெளிநாடு செல்லலாம் என்று கூறுகிறார். நான் உலக நிகழ்வு ஒன்றைத் தானே படமாக்கியுள்ளேன் ? இதில் என்ன தப்பு இருக்கிறது என்று இன்று காலை அவர் ஊடகங்களுக்கு பேட்டி கொடுக்க, அதற்கு பதிலடியும் உடனடியாகவே வந்துவிட்டது ! உலக நிகழ்வை நீங்கள் படமாக்கியதாகச் சொல்கிறீர்களே, முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்களே ஏன் அதனைப் படமாக்க உங்களுக்குத் தோணவில்லை என்று முஸ்லீம் சகோதரர்கள் கேள்வி எழுப்பியுள்ளார்கள் !

விஸ்வரூபம் விவகாரம் குறித்து நடிகர் கமல் ஹாசனுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

உங்கள் மீது அமைதியும் சமாதானமும் நிலவட்டுமாக.

நீங்கள் உலகப் புகழ்பெற்ற தலை சிறந்த நடிகர் என்பது உண்மை; நீங்கள் ஒரு முற்போக்கு சிந்தனையாளர் என்பதும் உண்மை. திரை உலகத்தில் சம்பாதித்து அதை திரை உலகத்திலேயே முதலீடு செய்பவர் என்று உங்களை அனைவரும் பாராட்டுவதும் உண்மை. உங்களின் 'உன்னைப்போல் ஒருவன்' திரைப்படமும், தற்போது 'விஸ்வரூபம்' திரைப்படமும் முஸ்லிம்களுக்கு எதிராக அமைந்தது துரதிஷ்டவசமானது. இப்படங்கள் குறித்து உங்களோடு கலந்துரையாடி எங்கள் குமுறல்களை கொட்டினோம். நீங்கள் அதை எந்த அளவுக்குப் புரிந்து கொண்டீர்கள் எனத் தெரியவில்லை.

நினைவிருக்கிறதா கமல் அவர்களே? முன்பு ஒரு முறை நீங்கள் அமெரிக்கா சென்றபோது உங்கள் பெயரில் ஹசன் என்ற பெயர் ஒட்டி இருப்பதைப் பார்த்து முஸ்லிம் எனக் கருதி உங்களை அமெரிக்க அதிகாரிகள் சோதனையிட்டு அவமானப்படுத்தியதை மறந்துவிட்டீர்களா? உங்களைப் போன்றே புகழ் பெற்ற நடிகர் ஷாருக்கானுக்கும், முன்னாள் இந்திய ஜனாதிபதி அப்துல் கலாமுக்கும் இதே போன்ற அவமானங்கள் 'முஸ்லிம்' என்ற காரணத்திற்காக நடந்தது.

முஸ்லிம் எப்படி எல்லாம் அவமானப்படுத்தப்படுகிறான், தனிமைப்படுத்தப்படுகிறான் என்பதற்கு இதுவெல்லாம் ஆதாரங்கள். இந்நிலையில் நேற்று காலை நீங்கள் அளித்த பேட்டியை கோவையில் இருந்தவாறு எமது கட்சியின் மாநாட்டுப் பணிகளுக்கு மத்தியில் பார்த்தேன். மிகவும் உருக்கமாக இருந்தது. உங்கள் மீது இரக்கம் ஏற்படும் வகையிலும் அனுதாபத்தை திருப்பும் வகையிலும் தங்கள் வார்த்தைகள் இருந்தது. உங்களை யார் தமிழ்நாட்டை விட்டு போகச் சொன்னது ? உங்களை மிரட்டுவதும், உருட்டுவதும் யார் ? பின்னணி என்ன ? அது உங்கள் மனசாட்சிக்குத் தெரியும். தங்கள் மீது எங்களுக்கு இப்போதும் மரியாதை உண்டு. நீங்கள் எங்களின் சகோதரர். அநீதியாக நீங்கள் யாராலும் பாதிக்கப்பட்டால் நீதியின் பொருட்டு உங்களுக்கு அரணாக இருப்போம். கவலைப்படாதீர்கள். ஆனால் உண்மையான பிரச்சனை என்ன என்பதை திசை திருப்பி முஸ்லிம்களை தனிமைப்படுத்துவதற்கு துணை போய் விடாதீர்கள். எங்களின் கோரிக்கை எங்களையும், எங்கள் குர்ஆனையும், வணக்க வழிபாடுகளையும் தவறாக சித்தரிக்க வேண்டாம் என்பதே!

நீங்கள் உலக நிகழ்வுகளைத் தான் படமாக எடுக்க வேண்டும் என விரும்பி இருந்தால் ஏன் முள்ளிவாய்க்காலில் ஒரே நாளில் ஒரு லட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டதை படமாக எடுக்கவில்லை ? பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து மும்பையில் 2 ஆயிரம் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டதை ஏன் படமாக எடுக்கவில்லை ? ஈராக்கில் அமெரிக்காவினால் 6 லட்சம் ஈராக்கியர்கள் கொல்லப்பட்டது பற்றி ஏன் படம் எடுக்கவில்லை ?

இப்படி பல துயர நிகழ்வுகள் உலகமெங்கும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அதையெல்லாம் படமாக எடுக்காமல் அமெரிக்காவை திருப்திப்படுத்தி, இந்தியர்களை கேவலப்படுத்தி, அதில் தமிழ்நாட்டு முஸ்லிம்களையும் கொச்சைப்படுத்தி ஒரு படம் எடுத்தது ஏன் ? இது தேவையா ? 30.01.2013 அன்று உங்கள் படம் வெளியான சில தியேட்டர்களின் மீது சில விஷமிகள் தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். பெட்ரோல் குண்டுகளை வீசி இருக்கிறார்கள். இவற்றை வன்மையாகக் கண்டிக்கிறோம். இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது ! முஸ்லீம் சகோதரர்கள் கேட்ப்பதில் என்ன பிழை இருக்கிறது ? வெளிநாட்டில் உள்ள ஈழத் தமிழர்களை நம்பித் தான் பெரும் பட்ஜெட்டில் படம் எடுக்கிறார்கள் ! ஆனால் எவரும் ஈழத்தில் தமிழர் படும் துன்பத்தை பெரும் பொருட்செலவில் படமாக எடுக்க முன்ரவில்லையே அது ஏன் ? 

அதிர்வுக்காக:

வல்லிபுரத்தான் .


http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=4468


ஈழத் தமிழருக்காக புன்னகை மன்னனில் குருதிப்புணலில் என பல படங்களில் படங்களில் சார்பாகவும் எதிராகவும் கருத்துக்கள் சொல்லப்பட்டுள்ளன!!தவறை மறைக்க இப்படியெல்லாம் பேசப்படாது!!மறைமுகமாக சொன்னதை புரியாமல் இலங்கைத் தமிழருக்காக கமல் படமெடுக்கவில்லை என்பதும் புலம் பெயர் தமிழர் உருவாக முன் திரையுலகம் பிச்சையெடுத்தது என்பதும் தவறாகும் ,நடிகர்கள் அன்றும் வசதியாக இருந்ததோடு போராட்டத்துக்கு உதவியும் உள்ளனர் வல்லிபுரத்தான்!!நன்றி மறத்தல் நன்று அன்று!!

Geen opmerkingen:

Een reactie posten