தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 1 februari 2013

நெதர்லாந்து கடற்படை இலங்கையில் தளம் அமைக்கிறதா: அதிர்ச்சி !


நெதர்லாந்து நாட்டின் கடற்படையினர், இலங்கைத் தீவில் தமது தளம் ஒன்றை அமைக்கவுள்ளனர் என்ற அதிர்ச்சித் தகவல் சற்று முன்னர் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் நிறைவுபெற்றுள்ளது. இந்தியப் பெருங்கடலில் நடைபெறும் கடற்கொள்ளையைத் தடுக்க தமது படைகள், இலங்கைத் தீவில் தளம் அமைக்கவேண்டும் என்று கோரிக்கை ஒன்றை நெதர்லாந்து அரசு முன்வைத்தது. இதனை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டும் உள்ளது. பல மில்லியன் டாலர்களை நெதர்லாந்து அரசு, இதற்காக இலங்கைக்கு கொடுக்கவும் இருக்கிறது என்ற செய்திகளும் வெளியாகியுள்ளது. இலங்கைத் தீவின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் உள்ள, ஒரு சிறிய கடற்கரையை இதற்காக ஒதுக்கிக் கொடுக்க மகிந்தர் சம்மதித்துள்ளார். 

தமது நேசநாடுகளில் இருந்துவரும், கப்பல்களில், நெதர்லாந்து கடற்படையினர் பயணிப்பர் என்றும், அது இலங்கைத் தீவை அண்மிக்கும் வேளை அவர்கள் இலங்கையில் இறங்கி தமது முகாமிற்குச் சென்று, பின்னர் அங்கிருந்து கட்டநாயக்க விமானநிலையம் ஊடாக, நெதர்லாந்து செல்வர் என்றும் இலங்கை தரப்பால் கூறப்படுகிறது. இருப்பினும் நெதர்லாந்து கடற்படையினர், பல ஆயுதங்களையும் வெடிபொருட்களையும் கொழும்புக்கு கொண்டுவந்து, அதனைக் களஞ்சியப்படுத்திவிட்டு, இன்று நெதர்லாந்துக்கு திரும்பிச் சென்றுள்ளதாக அங்கிருந்து கசியும் தகவல்கள் மூலம் தெரியவருகிறது. இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் தலைதூக்குவதாக இந்தியா கவலைகொண்டுள்ள இவ்வேளையில், நெதர்லாந்து அரசின் பிரசன்னம் இந்தியாவை எந்த அளவு அச்சுறுத்தும் என்பதனை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.



Geen opmerkingen:

Een reactie posten