இராணுவத்தினரின் ரக் வாகனம் மோதி பூநகரியில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. பூநகரியைச் சேர்ந்த த. லிங்கம் (வயது35) என்ற குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,
நேற்று இரவு வயலில் வேலை செய்து விட்டு குறித்த இருவரும் வீதியின் ஓரத்தில் படுத்து உறங்கியுள்ளனர். இதனை அவதானிக்காது மிக வேகத்தில் வந்த இராணுவத்தினர் குறித்த நபர்கள் மீது வாகனத்தை ஏற்றியுள்ளனர்.
இதில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதுடன், மற்றயவர் படுகாயமடைந்த நிலையில் தற்போதும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
எனினும், வாகனத்தை ஓட்டிச் சென்ற இராணுவச் சிப்பாய் கைதுசெய்யப்படவில்லை.
Geen opmerkingen:
Een reactie posten