ஜே.ஆர். ஜெயவர்தனவின் ஆட்சிக் காலத்தில் நாய்களைக் கொன்றேனும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற நிலைப்பாடு காணப்பட்டது.
தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சிக் காலத்தில், பிள்ளைகளை விற்று பணம் சம்பாதிக்கும் அளவிற்கு பெற்றோர் இழிவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
தற்போதைய ஜனாதிபதி நீதிக்கும் ஜனநாயகத்திற்கும் தலை சாய்;க்காத ஒருவராகும். சமூகத்தில் பாரியளவில் பல்வேறு பிரச்சினைகள் எழுந்துள்ளன.
பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டியது மிகவும் அவசியமானது என லால்காந்த குறிப்பிட்டுள்ளார்.
நாரஹேன்பிட்டி சாலிகா மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten