தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரன் இலங்கை இராணுவத்தினரால் பிடித்துக் கொல்லப்பட்டது தொடர்பான புகைப்பட ஆதாரங்களை சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கையில் நடந்த இறுதிப் போரில் அப்பாவித் தமிழர்கள் கொத்துக் குண்டுகள் வீசி கொல்லப்படனர் என்றும், உயிருடன் பிடிபட்டவர்கள் கடும் சித்திரவதை செய்யப்பட்டனர் என்றும் உலக நாடுகள் சொன்னபோது, இலங்கை அரசு மறுத்தது.
ஆனால் இப்போது வெளியாகியுள்ள புகைப்படங்கள் உண்மையானவை என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இலங்கை மண்ணில் பிறந்த சிறுவனை அந்நாட்டு அரசே கொடூரமாக படுகொலை செய்ததை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இந்திய அரசு எப்போதும்போல் இலங்கை அரசின் பக்கம் இல்லாமல் தர்மத்தின் பக்கம் இனியாவது இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஐ.நா.சபையில் மஹிந்த போர்க்குற்றவாளி என்ற தீமானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும்!
[ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 03:52.00 PM GMT ]
மூத்த கம்யூனிஸ் கட்சித் தலைவர் நல்லக்கண்ணு தெரிவிக்கையில இலங்கை இராணுவத்தின் கொடூர செயல், ஐ.நா. மனித உரிமை மீறலை இலங்கை வெளிப்படுத்தியுள்ளதை காட்டுகிறது. ஐ.நா.சபையில் மார் மாதம் நடக்கவிருக்கும் தீர்மானத்தில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு போர்க்குற்றவாளி என்னும் தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் சு.ப.வீரபாண்டியன் அவர்கள் தெரிவிக்கையில், ராஜபக்ஷ சகோதரர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தவேண்டும் எனவும், தலைவர் பிரபாகரனின் மகன் பாலகனை கொல்ல எவ்வாறு மனம் வந்தது என தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் இனப்படுகொலை! இந்தியா இன்னும் மௌனம் காப்பது ஏன்? தொல்.திருமாவளவன் கண்டனம்
[ செவ்வாய்க்கிழமை, 19 பெப்ரவரி 2013, 03:43.28 PM GMT ]
இப்போது பார்ப்பவர்களை நெஞ்சம் பதறவைக்கும் புகைப்பட ஆதாரத்தை சனல் 4 நிறுவனம் வெளியிட்டிருக்கிறது.
மேதகு பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் என்ற பாலகன் இலங்கை இராணுவத்தால் கைக்கெட்டும் தூரத்திலிருந்து சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதற்கான புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
பால்வடியும் முகத்தோடு அமர்ந்திருக்கும் பாலச்சந்திரன் ஒரு சில நிமிடங்களிலேயே கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான்.
இலங்கை அரசாங்கம் இனப்படுகொலை செய்ததை அறிந்திருந்தும் தொடர்ந்து ராஜபக்ச கும்பலுக்கு இந்திய அரசு ஆதரவு அளித்து வருகிறது. சிங்கள இனவெறி ராணுவத்துக்குப் பயிற்சி கொடுத்து வருகிறது.
போர்க்குற்றவாளிகளான ராஜபக்சவுக்கும், கோத்தபாயவுக்கும் இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கிறது.
தமிழகத்திலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தும்கூட ‘ராஜிய உறவு’ என்ற பெயரில் இந்திய அரசு தொடர்ந்து இலங்கை இனப்படுகொலையாளிகளுக்கு ஆதரவளித்து வருவது தமிழ் மக்களைக் கேவலப்படுத்தும் செயலாகும்.
பாலச்சந்திரன் படுகொலையைப்போல இன்னும் எத்தனை ஆதாரங்கள் வெளிவரப் போகின்றனவோ தெரியவில்லை.
இவ்வளவுக்குப் பிறகும் இந்தியா வாய்மூடி மௌனம் காப்பது முறையல்ல.
இன்னும் சில நாட்களில் நடைபெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைக் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியாவே தீர்மானம் ஒன்றை முன்மொழியவேண்டும்.
இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையை விசாரிக்க சுயேச்சையான சர்வதேச விசாரணை ஒன்றை ஐ.நா அவையின் மேற்பார்வையில் நடத்துவதற்கு இந்திய அரசு உடனடியாக முயற்சி மேற்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்துகிறது.
Geen opmerkingen:
Een reactie posten