இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 12 வயது மகன் இராணுவத்தினரின் பிடியில் சிக்கி கொல்லப்பட்டுக் கிடக்கும் புகைப்படத்தை விட, அவனது பார்வை என் நெஞ்சத்தை உறைந்து போக வைக்கிறது என இந்திய ஊடகவியலாளர் குமரேசன் தெரிவித்துள்ளார்.
பாலச்சந்திரனின் இந்தப் புகைப்படங்கள் மோசடியாகத் தயாரிக்கப்பட்டதல்ல என தெரிவித்துள்ள தடயவியல் வல்லுனர்கள், இது உண்மையான படமென்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்.
இலங்கை இராணுவத்தினரால் எந்த அளவிற்கு கொடூரங்கள் அரங்கேற்றப்பட்டிருக்கும் என்பதையும் இன்றைக்கும் அதை நியாயப்படுத்திக் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்தை நினைக்கும் போதும் நெஞ்சம் கொதிக்கிறது.
அந்த சிறிய பாலகன் மிக அண்மையில் வைத்தே துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான் என்பது மிகத் தெளிவாகின்றது. இதன் மூலம் இலங்கையின் போர்க்குற்றம் என்பது மிகவும் உச்சத்திற்குச் சென்றுள்ளது என்பதை மிகத் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது.
தமிழர்களுக்கு உண்மையான நீதி கிடைக்க வேண்டுமென்றால் இது தொடர்பான நேர்மையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இதற்கு இந்தியா, அண்டை நாடு என்ற வகையில் மட்டுமல்ல, பல்வேறு கலாச்சார வரலாற்றுத் தொடர்புடைய நாடு என்ற வகையில் இந்தியா வலுவான முறையில் போர்க்குற்ற விசாரணையினை வலியுறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten