தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 februari 2013

அமெரிக்கா எவ்வித கோரிக்கையையும் விடுக்கவில்லை!- ஜனாதிபதியின் பேச்சாளர்


அமெரிக்கா எவ்வித கோரிக்கைகளையும் விடுக்கவில்லை என ஜனாதிபதி பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு இலங்கைப் படையினரை அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கோரியதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டிருந்தது.
இதற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மறுப்புத் தெரிவித்தார் என குறிப்பிடப்பட்டிருந்தது.
எனினும், இவ்வாறான எவ்வித கோரிக்கையையும் அமெரிக்கா விடுக்கவில்லை எனவும் ஜனாதிபதி மறுப்பு தெரிவிக்கவும் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

(2ம் இணைப்பு)
 
அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை நிராகரிப்பு! செய்தியை மறுக்கிறார் ஜனாதிபதி பேச்சாளர்
[ செவ்வாய்க்கிழமை, 05 பெப்ரவரி 2013, 02:09.14 AM GMT ]
அமெரிக்காவின் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கைப் படையினரை ஆப்கானிஸ்தானில் கடமையாற்றி வரும் அமெரிக்கப் படையினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தது. எனினும், இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இடம்பெறும் போரானது அமெரிக்காவின் போராகும். அந்தப் போரில் இலங்கைப் படையினரை ஈடுபடுத்த முடியாது என அரசாங்க உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
நாடுகளின் உள்விவகாரப் பிரச்சினைகளில் நாம் ஒருபோதும் தலையீடு செய்யப் போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.
அமெரிக்கா கோரிக்கை கிடைக்கவும் இல்லை ஜனாதிபதி மறுக்கவுமில்லை!
இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா கோரிக்கை எதனையும் விடுக்கவும் இல்லை அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மறுக்கவும் இல்லை என்று ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க தெரிவித்தார்.
இலங்கை படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைக்குமாறு அமெரிக்கா விடுத்துள்ள கோரிக்கையை ஜனாதிபதி மஹிந்த ராஜபகஷ மறுத்துவிட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
2012 ஆம் ஆண்டில் 50 நாடுகளைச்சேர்ந்த சுமார் 102,000 படையினர் ஆப்கானிஸ்தானில் கடமையில் இருப்பதாக சர்வதேச பாதுகாப்பு மற்றும் உதவிப்படை அறிவித்துள்ளது.
பல வெளிநாட்டு படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து 2004 ஆம் ஆண்டு இறுதியில் வெளியேறுவதற்கு தீர்மானித்திருந்தன.
ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற படையில் 68,000 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் என்று பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Geen opmerkingen:

Een reactie posten