தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 5 februari 2013

சர்வதேச போர்க்குற்ற விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது!– இலங்கை அரசாங்கம் !!


சர்வதேச போர்க் குற்ற விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
அமெரிக்கா அல்லது வேறும் ஓர் நாடு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினாலும். போர்க் குற்றச் செயல்கள் தொடர்பிலான சர்வதேச விசாரணைகளுக்கு இடமளிக்கப்பட மாட்டாது ஆளும் கட்சி முக்கியஸ்தர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலைப்பாட்டில் மாற்றமில்லை. இது தொடர்பில் ஏற்கனவே சர்வதேச சமூகத்திற்கு அறிவித்துள்ளோம்.
இலங்கைக்கு எதிராக குற்றம் சுமத்தும் தரப்பினர் புலம்பெயர் புலி ஆதரவாளர்களிடம் பணம் பெற்றுக் கொள்வோர் என்பதனை நிரூபிக்கத் தயார்.
எட்டு நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சட்டவிரோதமான முறையில் ஆயுதங்களை வழங்கியுள்ளமை குறித்தும் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன என அவர் தெரிவித்துள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten