இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர்கள் மூவரும் இந்தியா சென்று பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதாக தகவல்க்ள் வெளியாகியுள்ளன.
இலங்கை பயணத்தை முடித்துக்கொண்டு மாலைதீவுக்கு செல்வதற்கு முன்னர் இவர்கள் மூவரும் இந்தியாவுக்கு சென்றுள்ளனர்.
இந்த பயணத்தின் போது, உதவி இராஜாங்க செயலாளர்கள் இந்தியாவின் பாதுகாப்பு செயலாளர் சிவ்ச்ஙகர் மேனன், வெளியுறவுச் செயலாளர் ரஞ்சன் மாத்தாய் ஆகியோரை சந்தித்து பேச்சு நடததியு;ளளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜெனீவாவில் அடுத்த மாதம் நடைபெற்வுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வின்போது அமெரிக்கா இலங்கை தொடர்பில் கொண்டு வரவுள்ள யோசனை தொடர்பில் அவர்கள் இந்த சந்திப்பின் போது கருத்துக்களை பரிமாறிக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்களை இந்திய உயர்ஸ்தானிகரகம் வழங்கவில்லை.
எனினும் இராஜாங்க உதவி செயலாளர்கள் இந்தியாவுக்கு சென்றமையை அமெரிக்க தூதரக பேச்சாளர் உறுதிசெய்தார்.
அத்துடன், கல்வி விடயங்கள் தொடர்பாக இதன்போது பேசப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
Geen opmerkingen:
Een reactie posten