அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக படகில் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி பிணையில் விடுக்கப்பட்ட சந்தேகநபர்களில் 14 பேர் மீண்டும் சட்டவிரோதமாக படகில் ஆஸி. சென்றுவிட்டனர். அவ்வாறு சென்ற சந்தேகநபர்கள் 14 பேருக்கும் நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்தார்.
101 சந்தேகநபர்கள் மே 2012ம் ஆண்டு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முயன்றதாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை கொழும்பு பிரதான நீதவான் ரஷ்மி சிங்கபுலி முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே கொழும்பு மோசடிப்பிரிவு பொலிஸார் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இந்த 14 பேரையும் பிணையில் எடுத்தவர்கள் நீதிமன்றத்தில் இருப்பதாக கொழும்பு மோசடிப்பிரிவு பொலிஸார் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தனர். இவர்களிடமிருந்து வாக்குமூலங்களை பெற்றுக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
புகலிடம் கோரிய 101 பேரை அவுஸ்திரேலியாவுக்கு களவாக அனுப்புவதில் முக்கியமாக பங்காற்றிய ஏழு பேரை பெப்ரவரி 22ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட நீதவான் 81 சந்தேகநபர்களையும் ஜுன் 28ம் திகதியன்று நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
அவுஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள ஏனைய 14 சந்தேக நபர்கள் மீதும் நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten