தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 juni 2015

சந்திரிக்காவை திட்டிய கோத்தபாய

இரட்டை வாக்கு கோரிக்கையை சோபித தேரர் ஏற்றமை எங்களுக்கு கிடைத்த வெற்றி: மனோ கணேசன்
[ சனிக்கிழமை, 20 யூன் 2015, 12:30.36 PM GMT ]
சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளின் இரட்டை வாக்கு கோரிக்கையை, வண. சோபித தேரர் ஏற்றுக்கொண்டமை எங்களுக்கு கிடைத்துள்ள மிகப்பெரும் வெற்றி என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.
சிறு மற்றும் சிறுபான்மை கட்சி பேரவைக்கும், விகாராதிபதி வண. சோபித தேரருக்கும் இடையில் இன்று கோட்டே நாகவிகாரையில் கலந்துரையாடெொன்று நடைபெற்றது.
அதன்பின் ஊடகங்களுக்கு கருத்து கூறிய மனோ கணேசன்,
உடனடியாக தேர்தல்முறை மாற்ற 20ம் திருத்த வர்த்தமானி பிரகடனத்தை வாபஸ் வாங்குங்கள். அதை வாபஸ் வாங்கியதன் பின்னர் சிறு மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் புதிய சுற்று பேச்சுவார்த்தைகளை நடத்தி,
இரட்டை வாக்கு முறைமையை தேர்தல் முறை மாற்ற யோசனை திட்டத்தில் உள்வாங்கி, அதை பாராளுமன்றம் கொண்டு சென்று சட்டமாக்குங்கள்.
இந்த இரண்டையும் செய்ய முடியாவிட்டால், இந்த காலாவதியான பாராளுமன்றத்தை உடன் கலைத்து விட்டு, புதிய தேர்தலை, நடப்பு தேர்தல் முறையின் கீழ் நடத்தி, புது பாராளுமன்றத்தை உருவாக்கி, அதில் தேர்தல் சட்டம் உட்பட நாட்டின் முக்கிய பிரச்சினைகளை தீர்க்கும் புதிய அரசியலமைப்பை சட்டமாக்குங்கள்.
எங்களுடனான பேச்சுக்களையடுத்து மேற்கண்ட மூன்று கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்ட வண. சோபித தேரர் அரசாங்கத்துக்கு அவற்றை முன் வைத்ததுடன் தொடர்ந்து எம்முடன் இணைந்து பணியாற்ற உடன்பட்டுள்ளார்.
இது எமது சிறு மற்றும் சிறுபான்மை கட்சி பேரவைக்கு கிடைத்துள்ள பெரும் வெற்றியாகும்.
நாளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை கட்சி தலைவர்கள் சந்திக்க ஏற்பாடாகியுள்ள கூட்டத்தில் இந்த கோரிக்கைகளை எடுத்து கூற உள்ளோம்.
இன்றைய எமது சந்திப்பில், சோபித தேரர், அமைச்சர் ரவுப் ஹக்கீம், திஸ்ஸ விதாரண, ரிசாத் பதுதீன், டக்லஸ் தேவானந்த, சிறிதுங்க ஜெயசூரிய, அசாத் சாலி ஆகியோர் உள்ளிட்ட பல கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyGRUSUft1E.html

நாடாளுமன்றம் அடுத்த வாரம் கலைக்கப்படுமா?- தேர்தல் முறையை மாற்ற விசேட நாடாளுமன்ற கூட்டம்
[ சனிக்கிழமை, 20 யூன் 2015, 12:30.37 PM GMT ]
நாடாளுமன்றம் அடுத்த வாரம் கலைக்கப்படவிருப்பதாக அரசாங்கத்தின் உயர் மட்ட வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொதுத் தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறும் எனவும் அந்த தகவல்கள் கூறியுள்ளன. 
புதிய தேர்தல் முறை சீர்த்திருத்தம் தொடர்பான 20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பின்னர், நாடாளுமன்றத்தை கலைக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்துள்ளார்.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டுள்ள 20வது திருத்தச் சட்டத்திற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட பல சிறிய கடட்சிகள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாலும் புதிய தேர்தல் முறை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் காரணமாகவும் அதனை நிறைவேற்றுவது சிரமமானதாக இருக்கும் என அரசாங்கம் உணர்ந்துள்ளது.
20வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற முடியாது என தெரியவந்தால், நாடாளுமன்றத்தை கலைக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த மூன்று பிரதான தலைவர்களிடம் கூறியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தேர்தல் முறையை மாற்ற விசேட நாடாளுமன்ற கூட்டம்
நாடாளுமன்ற நடவடிக்கைகளை மாற்றியமைத்து தேர்தல் முறைமையை மாற்றுவது தொடர்பில் அமைச்சரவையை ஒத்திவைப்பதற்கான யோசனை குறித்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமை விவாதிப்பதற்கு ஆளும் கட்சி தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, எதிர்வரும் வாரம் நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ள திருத்தங்கள் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் விசேட கட்சி தலைவர் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமல் ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் திங்கட்கிழமை காலை இவ்விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சந்திரிக்காவை திட்டிய கோத்தபாய
[ சனிக்கிழமை, 20 யூன் 2015, 12:40.09 PM GMT ]
நிதிமோசடி பிரிவு பொலிஸ் பிரிவு யாரை விசாரணை செய்ய வேண்டும் என்று தாமே தீர்மானிப்பதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரி;க்கா குமாரதுங்க கூறியிருப்பதாக தெரிவித்து, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச சந்திரிக்காவை கண்டித்துள்ளார்
சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு காணொளியில் அவர் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினரும் தமது சகோதரருமான பசில் ராஜபக்சவை இந்த அரசாங்கம் சிறையில் அடைத்தது.
இந்தநிலையில் சிறைக்கு அனுப்புவதற்காகவே தம்மை இன்னும் குறித்த பொலிஸ் பிரிவு விசாரணை செய்து வருவதாகவும் கோத்தபாய குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஊடக சுதந்திரம், நீதி சுதந்திரம் இருப்பதாக கூறப்படுகின்றபோதும் அரசாங்கம் குறித்த நிறுவனங்களை பல்வேறு வழிகளிலும் அச்சுறுத்தி வருவதாக கோத்தபாய தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் கடந்த அரசாங்கத்தில் இடம்பெற்றபோது பிபிசி, சிஎன்என், அல்ஜெசீரா என்று ஊடகங்கள் பிரசித்தப்படுத்தி வந்தன.
சநதரிக்கா தூதரகம், ஊடக அறிக்கைகளை வெளியிட்டு வந்தது. எனினும் தற்போது இவை அனைத்தும் அமைதியாக இருப்பதாக கோத்தபாய குற்றம் சுமத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRUSUft1H.html

Geen opmerkingen:

Een reactie posten