எதிர்வரும் பொதுத்தேர்தல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட இரகசிய கருத்துக்கணிப்பில் ஐக்கிய தேசியக்கட்சி வெற்றிப்பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தரப்பு இந்த இரகசிய கருத்துக்கணிப்பை நடத்தியிருக்கிறது.
இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக்கட்சி தேர்தலில் வெற்றிப்பெறும். இரண்டாம் இடத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அணி பெறும். மூன்றாம் இடத்தை மைத்திரிபால சிறிசேனவின் அணி பெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலைமையை தவிர்க்கும் முகமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு மூன்று உயர்மட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி சிங்கப்பூரின் லீ குவான் யூ மற்றும் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிங்டன் போன்றவர்களை போன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு உயர்நிலை முக்கியஸ்தர் என்ற தரம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.
இரண்டாவதாக, நாமல் ராஜபக்சவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உதவி தலைவர்களில் ஒருவராக நியமிக்க வேண்டும்.
மூன்றாவதாக ராஜபக்சவினருக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை படிப்படியாக குறைக்க வேண்டும் என்பதாகும்.
எனினும் இந்த ஆலோசனைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் தரப்பு இணக்கம் வெளியிடவில்லை. இந்தநிலையில் 29ஆம் திகதி வரும் சந்திரிகாவின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் 10 நாள் போதிபூஜையை நடத்தப்போவதாக அவரின் ஆதரவாளர்கள் அறிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten