முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகொரலவின் பிரபல ஆதரவாளர்களுள் ஒருவரான துஷார தேவாலேகம இனந்தெரியாத நபர்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி – தெலநொகரெல்லேவத்த, தெய்யன்கே தால பிரதேசத்தில் வைத்து இக்கொலை நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளது. தலதா அத்துகொரலவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது இக்கொலை நடந்துள்ளது.
37 நபருடைய துஷார தேவாலேகம மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின் இரத்தினபுரி நகரில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் சந்திராணி பண்டாரவின் பதாதைகள் திட்டமிட்டு சேதப்படுத்தப்பட்டுள்ளதாக கபே இயக்கம் தெரிவித்துள்ளது. மேலும் குருநாகல் நகரில் வைக்கப்பட்டிருந்த ஐதேக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க மற்றும் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பதாதைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
Geen opmerkingen:
Een reactie posten