சிறிலங்கா தொடர்பில் உள்நாடும் வெளிநாடும் இணைந்ததான (Hybrid ) கலப்பு விசாரணைப் பொறிமுறையினை நிராகரித்து ஐ.நா மனித உரிமைச்சபையில் உப மாநாடு, சிறிலங்கா விவகாரத்தில் அனைத்துலக விசாரணையூடான அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தினை நிறுவுமாறுமாறு வலியுறுத்தியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் Association Brukinabé pour la Survie de l'Enfance ,Collectif la Paix au Sri Lanka. International Centre for Prevention and Prosecution of Genocide (ICPPG) ஆகிய அமைப்புக்கள் கூட்டாக ஐ.நாவில் முன்னெடுத்திருந்த இரண்டாவது உப மாநாடாக இது அமைந்திருந்தது.
டென்மார்க், கனடா, புறுக்கினா பசோ, கெய்டி, பிரான்ஸ், இந்தியா உட்பட இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அவதானிப்பாளர்களாக பங்கெடுத்திருந்த இந்த உப மாநாட்டில், சிறிலங்காவும் அவதானிப்பாளராக பங்கெடுத்துருந்தது.
சிறிலங்காவின் ஆட்சிமாற்றத்தின் பின்னரான அனைத்துலகத்தின் போக்கில், அனைத்துலக விசாரணைப் பொறிமுறைக்கு கீழாக, பொறிமுறையென விழிக்கப்படுகின்ற வெளிநாடும் உள்நாடும் இணைந்ததான கலப்பு விசாரணை பொறிமுறைக்கு சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு எத்தனித்து வருகின்றன.
இந்நிலையில் அனைத்துலக விசாரணையே சிறிலங்கா விவகாரத்தினை கையாள்வதற்கு தகுந்த பொறிமுறை என்பதனை வலியுறுத்தும் வகையில் யAccountability for Sri Lanka: Will Hybrid Mechanism Work? எனும் தலைப்பில் இந்த உப மாநாடு இடம்பெற்றிருந்தது.
கம்போடியாவினை மையப்படுத்தி ஐ.நா விசாரணை விவகாரத்தில் முக்கியநபராக பங்காற்றியிருந்த பிரபல சட்டவாளர் Hon. Richard Rogers (Former head of the Khmer Rouge tribunal’s defense support section and an attorney for Global Diligence)) ICPPG மையத்தின் தலைவர் பேராசிரியர் சொர்ணராஜா ஆகியோர் இந்த உப மாநாட்டின் பிரதான கருத்துரைஞர்களாக பங்கெடுத்திருந்தனர்.
ஐ.நாவுக்கான மொரிசியஸ் தூதரகத்தின் வர்தக விவகாரங்களுக்கான முன்னாள் பிரதிநிதியாக இருந்த Dr. Narsinghen Hambyrajen (Professor of Law, Former Minister Counselor Trade Division, Permanent mission of Mauritius in Geneva) அவர்கள் இந்த உப மாநாட்டினை தலைமை தாங்கியிருந்தார்.
பல்வேறு நாடுகள் தங்களை வெளிப்படையாக அடையாளப்படுத்தி அவதானிப்பாளர்களாக பங்கெடுத்திருந்ததோடு, குறித்த நேர அளவினையும் கடந்து இந்த உபமாநாடு இடம்பெற்றிருந்தமை இந்த உபமநாட்டின் முக்கியத்துவத்தினை உணர்த்துவதாக அமைந்ததென நா.தமிழீழ அரசாங்கத்தின் ஐ.நா ஒருங்கிணைப்பாளர் சுகிந்தன் முருகையா அவர்கள் தெரிவித்துள்ளார்.
தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவினை மையப்படுத்திய மூன்றாவது உபமாநாடு இதுவென்பது இங்கு குறிப்பிடதக்கது.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGRaSUfx2C.html#sthash.RZcfzmD0.dpuf
Geen opmerkingen:
Een reactie posten