490 பேரின் விசாவில் சிக்கல்...? அவுஸ்திரேலிய அரசின் அடுத்த அதிரடி. (வீடியோ இணைப்பு)
அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்படும் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடுமென குடிவரவு அமைச்சர் பீற்றர் டற்றன் தெரிவித்துள்ளார்.
இவ்வாண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் 490 பேரின் விசாக்களை அவுஸ்திரேலிய அரசாங்கம் ரத்துச் செய்திருக்கிறது.
கடந்த சில மாத கால பகுதியில் அவுஸ்திரேலியாவில் இருந்து வெளியேற்றப்பட்ட நபர்களில் பாலியல் குற்றவாளிகள் 24 பேர், சிறுவர் துஷ்பிரயோக குற்றவாளிகள் 28 பேர், கொலைக் குற்றவாளிகள் 12 பேர் ஆகியோரும் அடங்குவார்கள்.
இந்த நபர்களில் பசுபிக, மத்திய கிழக்கு, ஐரோப்பிய பிராந்தியங்களைச் சேர்ந்தவர்களும் உள்ளதாக குடிவரவு அமைச்சர் தெரிவித்தார். அவர் மெல்பேர்ண் நகரில் செய்தியாளர்கள் மத்தியில் தகவல் அறிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten