தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 juni 2015

தேர்தலில் போட்டியிடும் பேய்களில் சிறந்த பேய்களுக்கு வாக்களியுங்கள்!

முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வங்கி கணக்கு
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 09:21.40 AM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதியுதவியை பெற்றுக்கொள்ளும் நோக்கில் வங்கி கணக்கொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறவிகள் குரல் அமைப்பின் தலைவர் முருத்தொட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். 
நாராஹேன்பிட்டி அபயராம விகாரையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்ற போதிலும் 105 காவற்துறையினர் மற்றும் 108 இராணுவத்தினர் என மொத்தமாக அவருக்கு 213 பேரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஊடக இணைப்பாளர் அண்மையில் வெளியிட்டிருந்த அறிக்கையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், முன்னாள் ஜனாதிபதிக்கு பாதுகாப்பில்லை எனக் கூறி அவரது ஆதரவாளர்கள் மக்கள் மத்தியில் அனுதாபத்தை பெற முயற்சித்து வருகின்றனர்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட வேண்டும் என அரசியலமைப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள எண்ணிக்கையை விட அதிகளவான பாதுகாப்பு மகிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGRZSUfw4F.html#sthash.d4neN6s3.dpuf

வெலிக்கடை மோதலில் கொல்லப்பட்டவர்களுக்கு இழப்பீடு: நீதி அமைச்சு
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 09:42.18 AM GMT ]
வெலிக்கடை சிறைச்சாலையில் நடந்த மோதலின் போது  கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த கைதிகளின் உறவினர்களுக்கு துரிதமாக இழப்பீடுகளை வழங்க நீதியமைச்சு தீர்மானித்துள்ளது.
வெலிக்கடை சிறையில் நடந்த மோதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோதல் ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் வன்முறையாக நடந்து கொள்ளாது, மோதல்களை ஏற்படுத்தாத நிலையில், காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களுக்கு மாத்திரம் இழப்பீடு வழங்குமாறு விசாரணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.
அத்துடன் இந்த மோதல் சம்பவம் குறித்து விசேட கவனம் செலுத்தப்படாத சில விடயங்கள் சம்பந்தமாக தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை காவற்துறை மா அதிபரின் நேரடி கண்காணிப்பின் கீழ் விசேட விசாரணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் எனவும் விசாரணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.

தேர்தலில் போட்டியிடும் பேய்களில் சிறந்த பேய்களுக்கு வாக்களியுங்கள்!
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 09:54.27 AM GMT ]
நடக்கவிருக்கும் பொதுத்தேர்தலில் இரண்டு பிரதான கட்சிகளும் பேய்களை தேர்தலில் களமிறக்க கூடும். அந்தப் பேய்களில் சிறந்த பேய்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டுமென மாதுலுவாவே சோபித்த தேரர் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆரோக்கியமான அரசியல்வாதிகளை அழைப்பது தொடர்பில் மார்ச் 12 அமைப்பு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
மோசடிகாரர்கள், ஊழல்வாதிகள், சிறுவர் துஸ்பிரயோகிகள், கெசினோகாரர்கள், குடுகாரர்கள், போதைப்பொருள், மது வியாபாரிகளுக்கு வேட்பு மனு வழங்கக் கூடாது. இதனை நான் கட்சித்தலைவர்களிடமும் வலியுறுத்திக்கேட்டுக்கொள்கின்றேன்.
மக்கள் தமது கையில் உள்ள வாக்கினை அளிப்பதற்கு முன்னர் யாருக்கு? எதற்கு? அளிக்கிறோம் என்பதனை சிந்திக்க வேண்டும்.
சிலவேளை, இரண்டு பிரதான கட்சிகளும் பேய்களை தேர்தலில் இறக்கக் கூடும் என்றும் அதில் சிறந்த பேய் தெரிவில் சிந்தனையுடன் செயற்பட வேண்டும் என்றும் சோபித்த தேரர் குறிப்பிட்டார்.

வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிட வேண்டும், தேர்தலுக்கு பணம் கிடைப்பது, செலவு செய்வது போன்றவை வெளிப்படுத்தப்பட வேண்டும், வங்கிக் கணக்கு சோதனை செய்யும் குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
- See more at: http://www.tamilwin.com/show-RUmtyGRZSUfw4H.html#sthash.i4UEM6yb.dpuf

Geen opmerkingen:

Een reactie posten