தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 juni 2015

பான் கீ மூனுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் மைத்திரி

கோத்தபாயவுக்கு சந்தர்ப்பம் வழங்குங்கள்: மைத்திரியிடம் கெஞ்சிய மகிந்த!
[ சனிக்கிழமை, 27 யூன் 2015, 07:01.23 AM GMT ]
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிர்வரும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பை வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவும் சந்திக்கவில்லை என இருத்தரப்பிலும் ஊடக அறிக்கைகள் வெளியிடப்பட்ட போதிலும், இருத்தரப்பும் சந்திப்பு நடந்துள்ளமை உறுதியாகியுள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடுவதில் இருந்த தான் ஒதுங்கி கொள்ளத் தயார் என முன்னாள் ஜனாதிபதி இதன் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கூறியுள்ளார்.
எனினும் இதுவரை தனக்கு பின்னால் வந்த முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு வழங்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தனக்கு தேர்தலில் போட்டியிடும் சந்தர்ப்பம் தேவையில்லை என பசில் ராஜபக்ச வைத்தியசாலையில் இருந்து வெளியேறிய பின்னர் தன்னை சந்தித்த போது கூறியதாகவும் கோத்தபாய ராஜபக்சவுக்கு கொழும்பில் அல்லது கம்பஹாவில் போட்டியிட வாய்ப்பை வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி கேட்டுள்ளார்.
இதனை தவிர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கருத்தை அறிந்து தன்னை தேசிய பட்டியலில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பது தொடர்பில் ஆராய்ந்து பார்க்குமாறும் மகிந்த ராஜபக்ச, ஜனாதிபதி மைத்திரிபாலவிடம் கூறியுள்ளார்.
இந்த விடயங்கள் தொடர்பில் நேற்று காலை இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன், இதனையடுத்து ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாக கூறப்படுகிறது.

பான் கீ மூனுக்கு அளித்த வாக்குறுதியை காப்பாற்றும் மைத்திரி
[ சனிக்கிழமை, 27 யூன் 2015, 07:25.13 AM GMT ]
ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனுக்கு அளித்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் நாடாளுமன்றத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 15ம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடர் ஆரம்பமாகவுள்ளது. இதன்போது இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கூட்டத்தொடருக்கு முன்னதாக இலங்கையில் பொறுப்பு வாய்ந்த புதிய அரசாங்கம் அமைக்கப்பட வேண்டும் என்று சர்வதேச சமூகம் எதிர்பார்த்துள்ளது.
அண்மையில் ஜனாதிபதியை தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்த ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இதுகுறித்து வலியுறுத்தியிருந்தார்.
எதிர்வரும் செப்ரெம்பரில், ஜெனிவாவில் கூட்டம் ஆரம்பமாகும் போது, இலங்கையில் புதிய அரசாங்கம் பதவியில் இருக்கும் என இலங்கை ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.  புதிய அரசின் பிரதிநிதிகளுடன் தாமும் ஜெனிவா கூட்டத்தொடரில் பங்கேற்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையிலேயே, செப்ரெம்பர் முதலாம் திகதி புதிய நாடாளுமன்றத்தைக் கூட்டும் வகையில், ஓகஸ்ட் 17ஆம் திகதி தேர்தலை நடத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRbSUfx7I.html

Geen opmerkingen:

Een reactie posten