[ திங்கட்கிழமை, 22 யூன் 2015, 10:39.52 AM GMT ]
நாட்டின் தேவைக்கு அமைய இந்தியாவில் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை மன்றக்கல்லூரியில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இப்படியான தேசிய கொள்கையின் முக்கியத்துவம் பற்றி அரசியல்வாதிகளுக்கு கற்றுக்கொடுப்பது புத்திஜீவிகளின் பொறுப்பாகும்.
இன்னும் கொஞ்ச நாட்களில் புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்படும். புதிய அமைச்சரவையில் 30 பேர் மாத்திரமே அங்கம் வகிப்பர்.
30 அமைச்சுக்களை வர்த்தமானியில் அறிவித்த பின்னர், தேசிய கொள்கைக்கான கட்சிகளின் இணக்கப்பாடுகளை பெற்றுக்கொள்ளுமாறு புத்திஜீவிகளிடம் கேட்டுக்கொள்கிறேன்.
நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான யுக மாற்றத்தை ஏற்படுத்த முயற்சித்து வருகிறோம். 50 ஆம் 60 ஆம் ஆண்டுகளில் நாட்டில் ஓரளவு தேசிய கொள்கை இருந்தது.
எனினும் கடந்த சில தசாப்தங்களாக அப்படியான தேசிய கொள்கைக்கு தடையேற்பட்டது. அரசாங்கங்கள் மாறிய போது சில நல்ல கொள்கைகளை கூட ஏற்றுக்கொள்ளாத நடவடிக்கைகள் இடம்பெற்றன எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரியை ஜனாதிபதியாக்கியது முட்டாள்தனம்
[ திங்கட்கிழமை, 22 யூன் 2015, 10:59.34 AM GMT ]
கொழும்பில் நேற்று நடைபெற்ற இளைஞர், யுவதிகளின் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தற்போது மீள முடியாத அளவுக்கு வீழ்ந்து போயுள்ளது. எனினும் ஜனாதிபதி அந்த முன்னணியை வெற்றியடைய செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இது ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒரு வகையில் சவாலை ஏற்படுத்துவதாகும். நமக்கு நாமே குழியை வெட்டிக்கொண்ட போன்ற செயலே நடக்கும்.
மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து போகும் கும்பலுக்கு மீண்டும் மக்கள் ஆணையை பெற முடியாது. அவர்களை ஒன்றிணைக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுத்தால், அப்போதுதான் சிக்கல் தோன்றும்.
அவர்களை ஒன்றிணைக்கும் விடயத்தை காரணமாக கொண்டே ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைத்து வருகிறார். அதனை ஜனாதிபதி பகிரங்கமாக கூறியுள்ளதால், நாம் செய்த முட்டாள்தனம் உறுதியாகியுள்ளது என்றும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRWSUfu4A.html
Geen opmerkingen:
Een reactie posten