பாராளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரும் வெளிநாட்டில் இருந்து வருகை தரும் தமிழ் இளைஞரகளது கைதுகள் தொடர்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை கொழும்பு கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து மட்டக்களப்பு பங்குளாவெளியில் உள்ள கோணேசபிள்ளளை குகதர்ஷன் (வயது 30) என்பவர் மத்திய கிழக்கு நாடான வகிரினில் இருந்து நாடு திரும்பும் போது குற்றத்தடுப்பு பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தன்னிடம் முறையிட்டுள்ளார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞனது கைது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது.
கோணேசப்பிள்ளை குகதர்ஷன் எனும் பெயருடைய இளைஞன் மத்திய கிழக்கு நாடுகளான கட்டார், சவுதி ஆகிய நாடுகளுக்கு பலதடவைகள் சென்று நாடு திரும்பியதாகவும் அதன்பிற்பாடு வகிரின் நாட்டிற்கு சென்று தொழில் புரிநிது விட்டு தமது ஊரில் நடைபெறும் மாரியம்மன் ஆலயத்திற்கு நேர்த்தி செலுத்துவதற்காக நாடு திரும்பியபோதே அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.
இவர் 2006 ஆம் ஆண்டிற்கு முன்னரே தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து தானாக விலகி தமது அன்றாட செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்தவர் என்பதும் இவர் தொழில் நிமிர்த்தம் தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று சம்பாதித்து வருவதாகவும் பெற்றோர் தன்னிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறினார்.
தமிழ் இளைஞர்களது கைது என்பது இந்த அரசாங்கத்திலே தான் அறிந்த வகையில் 19 ஆக அதிகரித்திருக்கின்றது இக் கைதுகள் தொடர்பாக உரிய அமைச்சருக்கு பலமுறை பாராளுமன்றத்தில் கூறியிருக்கின்றோம். ஆனால் நான் அதனை இனிமேல் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார் ஆனால் ஆனது ஒன்றுமில்லை தமிழ் இளைஞர்களது கைதுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளது.
தற்போது பாராளுமன்றம் கலைக்கப்பட்டிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் தமிழ் இளைஞர்களை கைது செய்வதென்பது மிகுந்த அச்ச நிலையை தோற்றுவித்திருக்கின்றது.
போர் முற்றுகைக்கு கொண்டுவரப்பட்டு விட்டதாக கூறும் அரசாங்கம் ஏன் தமிழ் இளைஞர்களை கைது செய்யவேண்டும்.
இந்த நாட்டிலே குற்றம் இழைத்தவர்கள் சுதந்திரமாக நடமாட தங்களை வாழ்க்கையில் இணைத்துக்கொண்டு தொழில் புரிந்து நாடு திரும்பும் அப்பாவிகளை கைது செய்து எதனை சாதிக்க நினைக்கின்றார்கள் என்று தெரியாத நிலையே தற்போது இருக்கின்றது.
ஏற்கனவே வெளிநாடுகளில் இருந்து வந்த இளைஞர்களை கைது செய்தவர்களை விடுதலை செய்யவேண்டும் என நாம் பலமுறை கோரிக்கை விடுததோம் அதனை ஏற்றுக்கொண்டு உடனடியாக விடுதலை செய்கின்றோம் என உரிய அமைச்சர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் இதுவரைக்கும் எந்த இளைஞனையும் விடுதலை செய்யவில்லை.
இந்த அரசாங்கம் ஆட்சி அதிகாரத்தில் இருந்து 168வது நாள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது. ஆனால் தமிழர்கள் எந்தப் பயனையும் பெறவில்லை மாறாக தமிழ் இளைஞர்களை கைது செய்யதது தன் இந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட மாற்றமாகும்.
எனவே இனியும் இவ்வாரான கைதுகள் இடம்பெறாமல் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் கைது செய்யத அனைத்து இளைஞர்களையும் விடுதலை செய்வதற்கு உரியவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
Geen opmerkingen:
Een reactie posten