தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 30 juni 2015

கூட்டணி வேட்பாளர் குழுவின் தலைவராக மஹிந்த?

நடைபெறவுள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் கூட்டணி வேட்பாளர் குழுத் தலைவராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை பெயரிடுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வெளியாகியுள்ளது.
மைத்திரி – மஹிந்தவை இணைக்கும் குழு நேற்று  ஜனாதிபதியை சந்தித்த போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிமல் சிறிபால டி சில்வா, அநுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த ஆகியோர் இச்சந்திப்பில் இணைந்துள்ள நிலையில் மஹிந்த ராஜபக்ச இன்றி தேர்தலுக்கு செல்வதன் மூலம் கட்சி அழிவடைய வாய்ப்புள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மஹிந்த இன்றி தேர்தலில் களமிறங்கி தோல்வியடைந்து வீட்டிற்கு செல்ல தயாரில்லை எனத் தெரிவித்த நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்ட முடியாதென குறிப்பிட்டடுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதிக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்றால் தான் அரசியலை விட்டு விலகுவதாக நிமல் சிறிபால டி சில்வா கூறியுள்ளார்.
இதன் போது முன்னாள் ஜனாதிஜபதி மஹிந்த ராஜபக்சவை கூட்டணி வேட்பாளர் குழுவின் தலைவராக பெயரிடுமாறு குறித்த குழுவின் உறுப்பினர்கள் யோசனை முன்வைத்துள்ளனர்.
இதற்கு பெரிய அளவிலான ஆதரவின்றி இணக்கம் வெளியிட்ட ஜனாதிபதி இது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கலந்துரையாடிய பின்னர் தான் தெரிவிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியிடம் முன்வைத்த யோசனை தொடர்பில் இன்று காலை கண்டி சென்று குறித்த மூன்று உறுப்பினர்களும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்துள்ளனர்.
இதன் போது நான் தனியாக எதனையும் தீர்மானிக்க முடியாது ஏனைய பங்காளி கட்சி உறுப்பினர்களுடன் கலந்துரையாடி பின்னர் தீர்மானிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வை பூர்த்தி செய்த முன்னாள் போராளிகள் அறுவர் சமூகத்தோடு இணைக்கப்பட்டனர்!
[ செவ்வாய்க்கிழமை, 30 யூன் 2015, 11:03.29 AM GMT ]
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் இணைந்து செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளிகள் ஆறு பேர் இன்று புனர்வாழ்வு பெற்று சமூகத்தோடு இணைக்கப்பட்டுள்ளார்கள்.
புனர்வாழ்வு ஆணையாளர் கேணல் எம்.எச்.ஆர்.கமின்டோவின் பணிப்புரைக்கமைய உதவி புனர்வாழ்வு ஆணையாளர் லெப் கேணல் பீ.பீ.எச்.பெர்ணான்டோ, பூந்தோட்ட புனர்வாழ்வு நிலைய பொறுப்பதிகாரி கப்டன் எச்.எஸ்.டீ.பெரேரா உள்ளிட்ட அதிகாரிகளால் இன்று உறவிகளிடதம் கையளிக்கப்பட்டனர்.
வவுனியா, பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்திலேயே    இந்நிகழ்வு இடம்பெற்றது.
இவ்வாறு கையளிக்கப்பட்டோர் புனர்வாழ்வின் போது சிங்கள மொழி, தச்சுத் தொழில், அலுமினிய பிற்றிங் தொழில், வயறிங் தொழில் போன்ற பயிற்சிகளை முடித்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten