நடேசன், புலித்தேவன் உட்பட்ட போராளிகள் குறித்து ஜெனீவாவில் முக்கிய சந்திப்பு.
விடுதலைப்புலிகளின் சிரேஸ்ட தலைவர்கள் நடேசன், புலித்தேவன் உட்பட பல போராளிகள் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தது அதன் பின்னர் காணமற்போனது குறித்த விபரங்களை அவர்களது உறவினர்கள் ஜெனீவாவில் 24 ம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் தெரிவிக்கவுள்ளனர்.
பசுமை தாயகம் மற்றும் அமெரிக்காவின் தமிழர் பாதுகாப்பு சபை ஆகியன இந்த கூட்டத்திற்கான ஏற்பாட்டினை மேற்கொண்டுள்ளன.
2009 ம் ஆண்டு 18000ற்கும் மேற்பட்ட தமிழர்களும் அவர்களுடைய தலைவர்களும் இலங்கை இராணுவத்திடம் சரணடைந்தனர் . இன்று வரை அவர்கள் பற்றி எந்த தகவலும் இல்லை என இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் பேச்சாளர் பாலு தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கம் தன்னால் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்த முழுiயான பட்டியலை வெளியிடுமாறு விடுக்கப்படும் வேண்டுகோளை புறக்கணித்து வருகின்றது.
சரணடைந்தவர்களிற்கு என்ன நடந்தது என்ற உண்மை வெளிவந்தால் மாத்திரமே இலங்கையில் நிரந்தர சமாதானம் சாத்தியம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/113464.html
முல்லைத் தீவு பகுதியில் மனிதப் புதை குழியில்… பெண்களின் உடல்களும்.
இலங்கை போரின்போது லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டனர். போர் முடிந்த பின்னர் விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகராக விளங்கிய கிளிநொச்சிக்கு அருகே ஒரு கிணற்றில் சில பெண்களின் உடல்கள் கண்டு பிடிக்கப்பட்டன.
இப்போது முல்லைத் தீவு பகுதியில் மனிதப் புதை குழிகள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. விடுதலைப்புலிகளின் ராணுவத் தலைநகராக இந்நகரம் விளங்கியது.
இந்த மாவட்டத்தில் புதுக் குடியிருப்பு என்ற நகரமும் உண்டு. இதுவும் விடுதலைப்புலிகளின் கோட்டையாக விளங்கியது.
போரின்போது இங்கு வசித்த மக்கள் ஏகப்பட்ட அளவில் கொல்லப்பட்டனர். இப்போது மறுகுடியமர்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்கு தற்காலிக வாழிவிடங்களில் மக்கள் தங்கியுள்ளனர். இப்பகுதியை சீரமைத்தப்போது பல இடங்களில் மனிதப் புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட எலும்புக் கூடுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
இவர்கள் அனைவரும் போரின்போது சிங்கள ராணுவ வீரர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு, ஒரே இடத்தில் புதைக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
http://www.jvpnews.com/srilanka/113468.html
Geen opmerkingen:
Een reactie posten