[ சனிக்கிழமை, 27 யூன் 2015, 11:14.26 AM GMT ]
இந்த அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிடும் நோக்கில் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய போது, அவருக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து வெளியேறி முதலாவது அமைச்சர் என கூறப்படுகிறது.
தற்போதைய அரசாங்கத்தில் முக்கிய அமைச்சு பொறுப்பை வகித்து வரும் இந்த அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தை அவரது மனைவி பயன்படுத்தி வருவதுடன் அமைச்சர் பிரிதொரு இல்லத்தை பயன்படுத்தி வருகிறார் என தகவல்கள் கூறுகின்றன.
அரசாங்கத்தின் ஜனநாயகம் பற்றி அடிக்கடி பேசும் இந்த அமைச்சர் நல்லாட்சிக்காக செயற்படுவது இவ்விதம்தான் என அரசாங்கத்திற்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதாக திவயின தெரிவித்துள்ளது.
நல்லது நடக்க வேண்டும் என்பதற்காக மஹிந்த தோற்கடிக்கப்படுவார்: ரணில்
[ சனிக்கிழமை, 27 யூன் 2015, 11:30.39 AM GMT ]
நல்லது நடக்கவேண்டும் என்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மீள் அரசியல் பிரவேசத்தை தடுக்க எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி செயற்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாவலப்பிட்டியில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய அவர்,
கடந்த ஜனவரி 8ஆம் திகதி தோல்விக்கண்டபோதும் மஹிந்தவை மீண்டும் அதிகாரத்துக்கு கொண்டு வரும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன.
எனினும் புதிய அரசாங்கம் அமைக்கும் மஹிந்தவின் திட்டத்தை தோற்கடித்து ஐக்கிய தேசியக்கட்சி பொதுத்தேர்தலில் வெற்றிப்பெறும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஜனாதிபதி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட நல்லாட்சி என்ற கொள்கையை பொதுத்தேர்தலிலும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக ரணில் தெரிவித்துள்ளார்.
இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த புலித்தேவனின் மனைவி அழைப்பு!
[ சனிக்கிழமை, 27 யூன் 2015, 11:52.21 AM GMT ]
இறுதிக்கட்டப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர்கள், தளபதிகள் இராணுவத்தினரிடம் சரணடைந்தது தொடர்பில் ஐ.நாவின் நேரடிச் சாட்சியங்களாக மாறியுள்ள ஒருவராக புலத்தேவனின் மனைவியிருக்கின்றார்.
இந்நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருங்கிணைப்பில் இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்துப் போராட்டத்தில் தன்னையும் இணைத்துக் கொண்டு இந்த அழைப்பினை இவர் விடுத்துள்ளார்.
சிங்கள அரசினது இனஅழிப்பு போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதிகிடைக்க வேண்டி முன்னெடுக்கப்படுகின்ற இந்த கையெழுத்துப் போராட்டத்தில் அனைவரும் பங்கெடுத்து ஒத்துழைப்புடன் வலுவூட்ட வேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
இரண்டு இலட்சங்களைக் கடந்து ஒரு மில்லியன் ஒப்பங்களை நோக்கி செல்லும் இக்கையெழுத்துப் போராட்டத்தில் குறித்த www.tgte-icc.org இந்த இணையமூலம் மின்னொப்பம் இட்டுக் கொள்ளலாம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyGRbSUeoyH.html
Geen opmerkingen:
Een reactie posten