யாழ் மாணவன் மீதான வாள் வெட்டுடன் தொடர்புடைய நபருக்கும் இராணுவத்திற்கும் தொடர்பா ?
[ Jun 26, 2015 04:19:52 PM | வாசித்தோர் : 8585 ]
யாழ்.பல்கலைகழக மாணவன் மீது வாள் வெட்டு மேற்கொண்ட நபர்கள் இராணுவத்துடன் தொடர்புடையவர்கள் என்பதுடன் பாரிய கொள்ளை குழுவை சேர்ந்தவர்கள் என்றும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கடந்த ஏப்பிரல் மாதம் 25ம் திகதி மானிப்பாய் பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சிக்கு சென்ற யாழ்.பல்கலைகழக மாணவர்கள் மீது கும்பல் ஒன்று வாள் வெட்டினை மேற்கொண்டது. அதில் ந முரளிதரன் எனும் மாணவனின் வலது கை மனிக்கட்டுடன் துண்டானது. எஸ் ஜெபர்சன் மற்றும் க.ரஜீவன் ஆகிய இரு மாணவர்களும் வாள் வெட்டில் பலத்த காயங்களுக்கு இலக்கி இருந்தனர்.
அந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த மானிப்பாய் பொலிசார் அது தொடர்பில் 11 சந்தேக நபர்களை ஏற்கனவே கைது செய்திருந்தனர்.அந்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபரினை புதன் கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் மானிப்பாய் ராஜ்குமார் கபில்ராஜ் (வயது 24) எனும் நபராவார்.அவரிடம் பொலிசார் மேற்கொண்ட விசாரணையில் அவர் முன்னர் இராணுவத்துடன் இணைந்து செயற்பட்ட நபர் எனவும் தற்போது இராணுவத்துடன் தொடர்பு இல்லை எனவும் தெரியவந்தது. அத்துடன் அவரது தொலைபேசியினை பரிசோத்தித்த போது அதில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய நபர்களின் தொலைபேசி இலக்கங்களும் அழைப்புக்களும் காணப்பட்டன.
அவை தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்ட போது யாழில் இடம்பெற்ற கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் கொண்ட குழு ஒன்று பற்றிய தகவல் பொலிசாருக்கு கிடைத்ததுடன் அக் குழுவினர் கிளிநொச்சி பகுதியில் பதுங்கி இருக்கின்றார்கள் என்ற தகவலும் அவர்களுக்கு கிடைத்தது.அந்த தகவலின் அடிப்படையில் வியாழக்கிழமை கிளிநொச்சிக்கு விரைந்த மானிப்பாய் பொலிசார் கிளிநொச்சி சாந்தபுரம் மற்றும் உருத்திரபுரம் ஆகிய பகுதிகளில் அக் குழு மறைந்திருந்த போது கைது செய்தனர்.கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 4 மோட்டார் சைக்கிள்கள் 6 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் பணம், 1 தங்கசங்கிலி 1 கைசங்கிலி 4 ஐ போன் 2 ஐபட், 1 வாள் என்பன மீட்கப்பட்டன.
கைது செய்யப்பட்ட நபர்களில் ஒருவர் கிளிநொச்சியை சேர்ந்தவர் எனவும் மானிப்பாயை சேர்ந்த ஒருவர் , கட்டுடையை சேர்ந்த மூவர் சங்கானையை சேர்ந்தவர்கள் இருவர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.கைது செய்யப்பட்ட 7 பேரிடமும் பொலிசார் மேலதிக விசாரணைகளை பல கோணங்களிலும் முன்னெடுத்து வருவதாக தெரிவித்தனர்.
புலிகளின் எச்சங்களை நாம் ஆதரிப்பது இல்லை: சம்பந்தன் சிங்கள எலும்புக்கு வாலாட்டுகிறார் !
[ Jun 26, 2015 04:31:47 PM | வாசித்தோர் : 18590 ]
தமிழீழ விடுதலைப்புலிகளின் எச்ச சொச்சங்கள் உலகின் பல பாகங்களிலும் சிதறியுள்ளன. இது புதிய விடயமல்ல. அவர்கள் செயற்படுவதாக கூறப்படுவதையும் நாம் மறுப்பதற்கில்லை. ஆனால் புலி எச்சங்களிற்கும், அவர்களின் செயற்பாடுகளிற்கும் நாம் ஆதரவளிப்பதில்லை. இப்படி பகிரங்கமாகவே பேசியுள்ளார் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன். நேற்று நாடாளுமன்றத்தில் இதனை அவர் தெரிவித்து சிங்களவர்களிடம் கை தட்டலை வாங்கி , சிங்கள காடையர்கள் போடும் எலும்புக்கு வாலாட்டியுள்ளார்.
அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் அறிக்கை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பில் முன்னாள் அமைச்சர் பிரிஸ் விக்னேஸ்வரன் மீது குற்றம் சுமத்தினார். இதற்கு பதிலளிக்கும்போதே சம்பந்தன் மேற்படி கருத்துக்களை தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில் , புலி எச்சங்களிற்கும், அவர்களின் செயற்பாடுகளிற்கும் நாம் ஆதரவளிப்பதில்லை. யுத்தம் முடிந்த பின்னர் நடந்த அனைத்து தேர்தல்களிலும் எமது மக்கள் வழங்கிய தீர்ப்பு என்ன? பிரிக்கப்படாத இலங்கைக்குள் எமக்கான தீர்வைத்தாருங்கள் என்றுதானே கேட்டார்கள்.
ஆக மொத்தம் விடுதலைப் புலிகள் தான் பிரிந்து கிடந்த அனைத்து தரப்பினரையும் , ஒன்றாக இணைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பு என்று நிறுவினார்கள் என்பதனை சம்பந்தம் மறந்துவிட்டார் போலும். தற்போது விடுதலைப் புலிகளை தரம் தாழ்த்திப் பேசியது போதாது என்று , சில வெளிநாட்டவர்கள் கொடுக்கும் பணத்தில் இலங்கையில் அரசியல் நடத்தும் இவருக்கு நாங்கள் எச்சங்களாக காட்சி தருகிறோமாம். இதுதான் வேதனைக்குரிய விடையமாக உள்ளது.
http://athirvu.com/newsdetail/3923.html
Geen opmerkingen:
Een reactie posten