தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 juni 2015

தர்மசங்கடத்தினில் முதலமைச்சர்! தவறான குற்றச்சாட்டா?துரோகிகளை காக்கும் முயற்சியா?


பிரதமர் ரணிலிடம் பணம் பெற்றதாக கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பினில் எழுப்பப்பட்ட குற்றச்சாட்டு தனது அமைச்சரான ஜங்கரநேசனின் தகவல் அடிப்படையினில் தவறாக வெளியிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது நெருங்கிய வட்டாரங்களிடையெ கவலை வெளியிட்டுள்ளார்.

தகவலை கொண்டுவந்திருந்த ஜங்கரநேசனிடம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதா அல்லது நேரடியாக பணம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு வழங்கப்பட்டதாவென தான் கேள்வி எழுப்பிய போதும் அமைச்சர் ஜங்கரநேசன் பணம் நேரடியாக கைகளினில் வழங்கப்பட்டதாக தகவல் வழங்கியதாகவும் இதையடுத்து விடயத்தை அம்பலப்படுத்த வேண்டியிருந்ததாகவும் முதலமைச்சர் கவலை வெளியிட்டுள்ளார்.

இத்தகைய நிதி ஒதுக்கீட்டினை கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ்பிறேமச்சந்திரனை அம்பலப்படுத்துவதாக கருதி ஜங்கரநேசனே முதலமைச்சரிடம் போட்டுக்கொடுத்திருந்தமை அம்பலமாகியுள்ளது.

எனினும் மாவை சேனாதிராசா மற்றும் சுமந்திரனென பலரும் இதனில் அகப்பட்டுள்ளனர்.இந்நிலையினில் நேற்று முதலமைச்சரினை மாவை,சரவணபவன்,சிறீதரன் என பலரும் சந்தித்து பேசியிருந்தனர்.இச்சந்திப்பின் பின்னரே தனது செயலாளர்களிடம் உண்மையினை போட்டுடைத்துள்ளார் முதலமைச்சர்.

ஏற்கனவே சுன்னாகம் குடிநீர் விவகாரத்தினில் ஜங்கரநேசனின் தகிடுதங்களால் முதலமைச்சர் தர்மசங்கடங்களை எதிர்கொண்டுள்ளமை தெரிந்ததே.
20 Jun 2015

Geen opmerkingen:

Een reactie posten