தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juni 2015

புலம்பெயர் மக்கள் நாட்டிற்கு திரும்ப வேண்டும்: சம்பந்தன்



திருகோணமலை மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆயர் வணக்கத்திற்குரிய நோயல் இம்மானுவல் அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது.
திருகோணமலை தமிழர் அபிவிருத்தி ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வானது, காலை 9.30 மணிக்கு சர்வோதய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி, திருகோணமலை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துரைரட்ணசிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.
இதன்போது கருத்துத் தெரிவித்த கிழக்கு மாகாண கல்வி அமைச்சர்,
திருகோணமலை மாவட்டத்தில் காணிகளை பற்றி நாம் பெரிதாக பேசுகின்றோம். ஆனால் காணிகளைப் பொறுத்தவரையில் நாம் அவற்றில் குடியேற்றுவதற்கான மக்கள் எம்மிடம் இல்லை. இது ஒரு கவலைக்குரிய விடயம் என தெரிவித்தார்.
மேலும் இங்கு கருத்துத் தெரிவித்த சம்பந்தன்,
புலம்பெயர்ந்த எமது மக்கள் நாட்டிற்கு திரும்ப வரவேண்டும். எமது மக்களை பலப்படுத்த வேண்டும். மக்கள் வாழுகின்ற இடங்களில் தொடர்ந்தும் வாழ்கின்ற வகையில் சூழல் அமையப்பட வேண்டும். அதற்கு எமக்கு அதிகாரம் வேண்டும் அதன்மூலமாக நாம் எமது மக்களை பலப்படுத்த முடியும்.
உண்மையான நல்லிணக்கம், சமத்துவம் என்பன ஏற்படுவதாக இருந்தால் அது மக்களின் சுயமரியாதையை உறுதி செய்யக்கூடிய அரசியல் தீர்வின் மூலமாகத்தான் அடைய முடியும் என தெரிவித்தார்.

Geen opmerkingen:

Een reactie posten