சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரகீத் ஹெக்நேலியகொட காணாமல் போக செய்யும் முன்னர் அவருக்கு இனந்தெரியாத நபர் தொலைபேசி அழைப்பொன்றை எடுத்துள்ளதுடன் அவர் யார் என்பது இதுவரை கண்டுப்பிடிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
அத்துடன் தொலைபேசி அழைப்பு எடுக்கப்பட்ட செல்போன் தொலைபேசியை இலங்கைக்கு கொண்டு வந்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், எந்த நபர் இந்த தொலைபேசியை இலங்கைக்கு கொண்டு வந்தார் என்து பற்றிய தகவல்களை தேடி வருவதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செல்போனுக்கு 22 சிம் அட்டைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், அந்த செல்போன் மூலம் எடுக்கப்பட்ட அழைப்புகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை ஒன்றை வழங்குமாறு நீதிமன்றம், தொலைத் தொடர்புகளை ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழுவிற்கு உத்தரவிட்டுள்ளது.
அந்த அறிக்கை தற்போது கிடைக்க உள்ளதாகவும் காவற்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten