தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 juni 2015

20வது திருத்தம் மீதான விவாதம்! நாடாளுமன்றம் இரண்டாக பிளவு

வடக்கில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படவில்லை!- பிரதமர்
[ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2015, 02:21.11 PM GMT ]
வடக்கில் இருந்து இராணுவ முகாம்களை அகற்றும் தீர்மானம் எவையும் எடுக்கப்படவில்லை என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவ்வாறான நடவடிக்கையை இராணுவம் எடுத்திருக்குமானால் அது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படும் என்று ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, கொடிகாமம் இராணுவ முகாம் அகற்றப்பட்டதாக வெளியிட்ட தகவல் தொடர்பிலேயே ரணில் இதனை தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தை பொறுத்தவரையில் சம்பூர் கடற்படை முகாமை மாத்திரம் அது அகற்றியதாக ரணில் குறிப்பிட்டார்.
அதுவும் முன்னைய அரசாங்கம் எடுத்த தீர்மானத்துக்கு அமையவே இந்த முகாம் அகற்றப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இந்தநிலையில் அகற்றப்பட்ட முகாமுக்கு பதிலாக மற்றும் ஒரு முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

20வது திருத்தம் மீதான விவாதம்! நாடாளுமன்றம் இரண்டாக பிளவு
[ செவ்வாய்க்கிழமை, 23 யூன் 2015, 02:41.06 PM GMT ]
20வது திருத்தப் பிரேரணை தொடர்பில் நாடாளுமன்றம் இன்று இரண்டாக பிரிந்து விவாதத்தில் ஈடுபட்டது.
கடந்த வாரம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட 20வது திருத்தம் தொடர்பிலேயே இந்தநிலை ஏற்பட்டது.
பிரேரணை தொடர்பான ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்றபோது சில அரசியல்கட்சிகள் அதற்கு ஆதரவாக வாதிட்டன. சில கட்சிகள் எதிராக வாதிட்டன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, 20வது திருத்தத்தை கொண்டு வந்ததன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை இரண்டாக பிளவடைய வழி செய்து விட்டார் என்று ஜே.வி.பி தெரிவித்தது.
கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இந்தக்கருத்தை வெளியிட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபாலவை அகற்றிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவே கட்சியை காப்பாற்றுவார் என்று அந்தக்கட்சி பார்க்கிறது.
இதேவேளை 20வது திருத்தம் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதம் கொண்டு வரப்பட்டமைக்காக எதிர்க்கட்சி தலைவர் நிமல் சிறிபால டி சில்வா தமது எதிர்ப்பை வெளியிட்டார்.
இந்த விவாதத்தை பொறுத்தவரையில் எதிர்க்கட்சியின் மீது களங்கத்தை ஏற்படுத்தவே அரசாங்கம் முயல்கிறது என்று அவர் குற்றம் சுமத்தினார்.
எனினும் 20வது திருத்தம் தொடர்பில் ஒத்திவைப்பு விவாதத்தை கொண்டு வந்ததில் எவ்வித பிழைகளும் இல்லை என்று சபாநாயகர் தெரிவித்தார்.
இந்தநிலையில் நாடாளுமன்றத்தில் நாளையும் 20வது திருத்தம் தொடர்பில் முழுநாள் அமர்வை நடத்தவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmtyGRXSUfv2E.html

Geen opmerkingen:

Een reactie posten