தம்பி நீ என்னைத் திட்டப் போகிறாயா? என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சஈ அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பேச அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்கவிற்கு தேவை ஏற்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சர் தனது அதிகாரியொருவரை அழைத்து ஜனாதிபதியைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளுமாறு பணித்துள்ளார்.
குறித்த அதிகாரிää ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு அழைப்பினை ஏற்படுத்தி தொலைபேசியை அமைச்சரிடம் ஒப்படைத்துள்ளார்.
ஜனாதிபதியுடன் 20 நிமிடங்கள் பேச வேண்டுமென எஸ்.பி. திஸாநாயக்க பாதுகாப்பு அதிகாரியிடம் கோரியியுள்ளார்.
பாதுகாப்பு அதிகாரி தொலைபேசியை ஜனாதிபதியிடம் ஒப்படைத்திருந்தார்.
“எனக்கு 12 நிமிடங்கள் போதாது, எனக்கு குறைந்த பட்சம் 20 நிமிடங்கள் தேவை” என எஸ்.பி. திஸாநாயக்க தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
“தம்பி நீ ஏன் 20 நிமிடங்கள் கேட்கிறாய், என்னைத் திட்டவா?” என தொலைபேசியின் மறுமுனையில் வந்த குரல் எஸ்.பி. திஸாநாயக்கவை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
தொலைபேசியின் மறுமுனையில் பேசியது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவாகும்.
ஜனாதிபதிக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தித் தருமாறு எஸ்.பி. பாதுகாப்பு அதிகாரிக்கு பணிப்புரை விடுத்த போது அதிகாரி, முன்னாள் ஜனாதிபதிக்கு அழைப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
இதனால் இந்த குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த விடயங்களை எஸ்.பி. திஸாநாயக்க கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
Geen opmerkingen:
Een reactie posten