தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 28 juni 2015

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் நிதிக்குற்றவியல் விசாரணைகள் நடக்கும்: ஜோன் அமரதுங்க

கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ள மஹிந்த?
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2015, 12:28.06 PM GMT ]
எதிர்வரும் பொது தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக மஹிந்த தரப்பு செயற்பாட்டாளர் ஒருவர் குறிப்பிடுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவை அரசியல் ரீதியில் நோகடிப்பதற்கு அவ்வாறான ஒரு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளாதாக அவர் சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபகச் குருணாகல், அநூராதபுரம் அல்லது இரத்தினபுரி மாவட்டங்களில் தேர்தலில் போட்டியிடுவார் என இதற்கு முன்னர் தகவல் வெளியாகின.
எப்படியிருப்பினும், மஹிந்த ராஜபக்ச ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியின் கீழ் போட்டியிடுவார் என்றால், கூட்டணியின் கீழ் போட்டியிடாமல் இருப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நெருங்கிய உறுப்பினர்கள் தற்போது வரையில் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் நிதிக்குற்றவியல் விசாரணைகள் நடக்கும்: ஜோன் அமரதுங்க
[ ஞாயிற்றுக்கிழமை, 28 யூன் 2015, 12:08.48 PM GMT ]
பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் நிதிக்குற்றவியல் விசாரணைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற முக்கிய கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும்.
ஏன் சில அரசியல்வாதிகள் கைது செய்யப்படவில்லை என மக்கள் கேள்வி எழுப்புவதாகத் தெரிவித்துள்ள அவர்,
ஊழல் மோசடிகள் குறித்து உறுதியான ஆதாரங்கள் காணப்பட்டால் அவர்களை கைது செய்ய முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் சில முக்கியஸ்தர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எனினும் பாராளுமன்றம் கலைக்கப்பட்டாலும் விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் அதில் எந்த மாற்றமும் இல்லை எனவும் அங்கு அவர் குறிப்பிட்டார்.

Geen opmerkingen:

Een reactie posten