தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 25 juni 2015

மகிந்தவின் கோரிக்கைக்கு அமைய கே.பிக்கும் விசேட பாதுகாப்பு

மஹிந்த மீண்டும் பிரதமரானால் நிர்வாகத்தில் திருடர்களா நியமிக்கப்படுவர்?: நவீன் கேள்வி
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 01:35.37 PM GMT ]
மஹிந்த ராஜபக்ச பிரதமராக தெரிவு செய்யப்பட்டால் மீண்டும் முன்பிருந்த திருடர்களையா? நிர்வாகத்துக்காக நியமிக்கப்போகிறார் என்று அமைச்சர் நவீன் திஸாநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தாமும் பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்னைய அரசாங்கத்தின் ஊழல்கள் மற்றும் மோசடிகள் காரணமாகவே விலகியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் மஹிந்த ராஜபக்ச அரசியல் இலாபம் கருதி பொய்யான காரணங்களை கூறிவருகிறார். இதில் வடக்கில் இருந்து 59 இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டதாக கூறப்படும் செய்தியும் ஒன்றாகும் என்று நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்சவுக்கு முடியுமானால் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபின்னர் அகற்றப்பட்ட ஒரு இராணுவ முகாமை பெயரிடுமாறு நவீன் சவால் விடுத்துள்ளார்.
இதேவேளை தம்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் மற்றும் மோசடிகள் குறித்து மஹிந்த ராஜபக்ச எதுவுமே கூறாமல் இருந்து வருகிறார் என்றும் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சுப் பதவியில் இருந்து என்னை விலகுமாறு ஆறுமுகம் தொண்டமான் கட்டாயப்படுத்தினார்: எம்.ராம்
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 01:47.57 PM GMT ]
தன்னை அமைச்சுப் பதவியில் இருந்து விலகுமாறு ஆறுமுகன் தொண்டமான் கட்டாயப்படுத்தியாதாக மத்திய மாகாண இந்து கலாசார மற்றும் விவசாயத்துறை அமைச்சர் எம்.ராம் குற்றம்சாட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அமைச்சர் எம்.ராம் தெரிவிக்கையில்,
எந்தவிதமான காரணமும் இல்லாமல் நான் ஒரு போதும் பதவியை இராஜானாமா செய்ய மட்டேன் எனவும் இந்த அமைச்சு பதவியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.ரமேஷ்க்கு வழங்கும் படி இ.தொ.கா பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமான் மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவுக்கு கடிதம் மூலமாக வேண்டுக்கோள் விடுத்துள்ளதாக அமைச்சர் எம். ராம் தெரிவித்தார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸில் பல வருடங்காக சேவை செய்துள்ளதாகவும் தோட்ட தொழிலாளிகளுக்கு சேவை செய்வதற்காகவே தான் முன்வந்ததாகவும் தொடர்ந்தும் சேவை செய்வேன் என இதன்போது அவர் மேலும் தெரிவித்தார்.

மகிந்தவின் கோரிக்கைக்கு அமைய கே.பிக்கும் விசேட பாதுகாப்பு
[ வியாழக்கிழமை, 25 யூன் 2015, 02:01.36 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கோரிக்கைக்கு அமைய கே.பி. என்ற குமரன் பத்மநாதனுக்கும் விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்புக்கு தேவையான குண்டு துளைக்காத வாகனங்கள் உட்பட மூன்று பென்ஸ் கார்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி அதிகாரத்தை விட்டு செல்லும் போது அவற்றை எடுத்துச் சென்றார் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmtyGRZSUfw6G.html

Geen opmerkingen:

Een reactie posten