தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 24 juni 2015

லண்டன் ஹீத்ரூ விமான நிலையத்தில் ருவாண்டா தளபதி போர் குற்றத்திற்காக கைதானார் !


ருவாண்டாவில் 1994ம் ஆண்டு ஏற்பட்ட ரத்தக்களறிக்கு பொறுப்பாக இருந்த முக்கிய நபர் என்று கருதப்படுபவர் , லூடேனன் ஜெனரல் கேரான்சி. இவர் பல அப்பாவி பொதுமக்களை கொலை செய்ய அன் நாட்டு ராணுவத்திற்கு கட்டளை பிறப்பித்தார். பெரும் போர்குற்றச் செயல்களில் ஈடுபட்ட இவர் , 3 ஸ்பெயின் நாட்டவர்களை கொலைசெய்ய ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பித்தார். இதனால் அவர்களது உறவினர்கள் ஸ்பெயின் நாட்டில் வழக்கு தொடர்ந்து கேரன்சிக்கு எதிராக பல நடவடிக்கையை முன்னர் மேற்கொண்டு இருந்தார்கள். இன் நிலையில் கடந்த 3 தினங்களுக்கு முன்னர்(21) அவர் லண்டனில் உள்ள ஹீத்ரூ விமான நிலையத்திற்கு , வந்திருந்தார். அவர் லண்டன் ஊடாக பயணித்து வேறு ஒரு நாடு செல்ல இருந்தவேளை அவரை லண்டன் பொலிசார் திடீரெனக் கைதுசெய்துள்ளார்கள் என்று அதிர்வு இணையம் அறிகிறது.
ஸ்பெயின் நாடு ஐரோப்பிய ஒன்றிய வலய நாடுகளுக்குள் இருக்கிறது. அன் நாட்டில் கேரன்சியை கைதுசெய்ய நீதிமன்ற உத்தரவு உள்ளது. இதேவேளை கேரன்சி லண்டன் ஊடாக பயணம் செய்ய இருக்கிறார் என்ற ரகசிய தகவலை , பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான மக்களின் யாரோ ஒருவர் பிரித்தானியப் பொலிசாருக்கு தகவல் சொல்லிவிட்டார்கள். மேலும் ஸ்பெயின் நீதிமன்றில் , அவருக்கு பிடியாணை இருக்கும் விடையத்தையும் ஆதாரத்துடன் கொடுத்துவிட்டார்கள். இதனால் அவரை லண்டன் பொலிசார் உடனே கைதுசெய்து தடுத்து வைத்துள்ளார்கள். அவரை ஸ்பெயின் நாட்டுக்கு நாடு கடத்த பிரித்தானியா தீர்மானித்துள்ளது என்று மேலும் அறியப்படுகிறது.
இலங்கை போன்று ருவாண்டாவிலும் பல இனப்படுகொலைகள் நடந்தது. ஆனால் அவை 1994ல் நடந்தவை. அப்போது நடந்த இன்ப்படுகொலைகளின் சூத்திர தாரி இப்போது மாட்டிக்கொண்டுள்ளார். ருவாண்டா நாட்டு தேசிய செயல்பாட்டாளர்களுக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றி இதுவாகும். இதனைப் போன்று தமிழ் தேசிய செயல்பாட்டாளர்களும் என்றும், சோர்ந்துவிடக்கூடது. என்றாவது ஒரு நாள் தமிழர்களை அழித்த அனைவரும் தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும் என்பதில் புலம்பெயர் தமிழர்கள் மிகுந்த உறுதியாக உள்ளார்கள்.

Geen opmerkingen:

Een reactie posten