வடக்கு கிழக்கிற்கு சுயாட்சி வழங்கப்பட வேண்டுமென 15 வெளிநாட்டவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சர்வதேச சமூகத்திடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் சட்ட மா அதிபர் ரொம்சே க்ளார்க் உள்ளிட்டவர்கள் இவ்வாறு முயற்சித்து வருகின்றனர்.
இவ்வாறு இலங்கைக்கு எதிராக கோரி வரும் நபர்கள் பற்றிய விபரங்களை அரசாங்கம் திரட்டியுள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்றின் முன்னாள் உறுப்பினர் ரொபர்ட் ஈவன்ஸ், சூடான் விடுதலை இயக்கத்தின் டெனியல் மாசன், அவுஸ்திரேலியாவின் பிரயன் செனவிரட்ன உள்ளிட்ட புலி ஆதரவாளர்கள் இவ்வாறு கோரியுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக போலி போர்க்குற்றச் செயல் குற்றச்சாட்டுக்கள் முன்வைத்துள்ளன.
அரசாங்கம் மற்றும் படையினருக்கு எதிராக சர்வதேச நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட வேண்டுமெனவும் கோரியுள்ளனர்.
சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின் மூலம் வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை வழங்க வேண்டுமென இந்த வெளிநாட்டவர்கள் கோரியுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten