தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 20 juni 2015

அரசின் செலவில் மகனுடன் 40 வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட அமைச்சர்

மகிந்த, மைத்திரியை ஒரு மேசைக்கு கொண்டு வரமுடியாது: அர்ஜுன
[ சனிக்கிழமை, 20 யூன் 2015, 01:26.46 PM GMT ]
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு ஒரு மேசையிலோ அல்லது ஒரு மேடையிலோ இருப்பதற்கு முடியுமா என துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து அமைச்சர் அர்ஜுன ரணதுங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர்கள் இருவருக்குமிடையில் தெளிவான வேற்றுமை நிலவுவதாகவும், அவர்களை ஒரே மேசைக்கு கொண்டு வருதல் பயனற்ற செயல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் அதிகாரங்களை அதிகரித்து கொள்வதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்.
எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதற்கு எதிர்மறையான ஒரு பாதையில் சென்று அவரின் அதிகாரங்களை குறைத்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார் என அமைச்சர் அர்ஜுன ரணதுங்க இதன் போது சுட்டிக்காட்டினார்.

அரசின் செலவில் மகனுடன் 40 வெளிநாடு பயணங்களை மேற்கொண்ட அமைச்சர்
[ சனிக்கிழமை, 20 யூன் 2015, 01:38.55 PM GMT ]
புதிய அரசாங்கத்தின் 100 நாட்களுக்குள் அமைச்சர் ஒருவர் தனது மகனுடன் 40 தடவைகள் வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாகவும் இந்த பயணங்களுக்கான அந்த அமைச்சரின் பொறுப்பின் கீழ் உள்ள அமைச்சு சுமார் ஒரு கோடி ரூபா பணத்தை செலவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொது வேட்பாளராக போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவு தெரிவித்து, இந்த அமைச்சர் கடந்த அரசாங்கத்தில் இருந்து வெளியேறினார்.
இவரது மகன் மாகாண சபை உறுப்பினராக பதவி வகித்து வருகிறார்.
இவர்கள் ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் பலவற்றுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதுடன், எதிர்காலத்தில் சில பயணங்களை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் போது சாதாரண வகுப்பில் பயணித்து வருகிறார்.
எனினும் குறித்த அமைச்சரும் அவரது மகனும் வர்த்தக வகுப்பில் ஆசனத்தை ஒதுக்கி ஆடம்பரமாக பயணம் செய்து வருவதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmtyGRUSUft2E.html

Geen opmerkingen:

Een reactie posten