[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 09:41.23 AM GMT ]
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று முற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும் இடையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றதாக ஊடகங்களில் செய்தி வெளியாகின.
முன்னாள் ஜனாதிபதிக்கும், சமகால ஜனாதிபதிக்கும் இடையில் நேற்று சந்திப்பொன்று நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளமை குறித்து, ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதியமைச்சர் அதில் தவறில்லை என்றார்.
அதேபோல் நாடாளுமன்றத்தை கலைக்கும் நற்செய்தியை மிக விரைவில் கேட்க முடியும் எனவும் தலைமைத்துவத்திடம் இருந்து கிடைத்த தகவலுக்கு அமைய தான் இதனை கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றம் எப்போது கலைக்கப்படும் என ஊடகவியலாளர் கேள்வி எழுப்பிய போது பிரதியமைச்சர் அதற்கு பதில் எதனையும் வழங்கவில்லை.
அதேவேளை அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் வழங்கிய உறுதிமொழிகளில் 80 வீதமான உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளது. மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவது 100 நாள் அரசாங்கத்தின் முக்கியமான நோக்கம் எனவும் அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.
மைத்திரி – மஹிந்த சந்திப்பு இடம்பெறவில்லை!– மஹிந்தவின் ஊடக பேச்சாளர்
[ வெள்ளிக்கிழமை, 26 யூன் 2015, 09:44.42 AM GMT ]
எனினும் ஊடககங்களில் வெளியாகிய மைத்திரி – மஹிந்த சந்திப்பை முன்னாள் ஜனாதிபதியின் ஊடக பேச்சாளர் ரோஹான் வெலிவிட்ட முற்றாக நிராகரித்துள்ளார்.
இருவருக்கும் இடையில் சபாநாயகரின் இல்லத்தில் நேற்று இரவு எவ்வித சந்திப்புகளும் இடமபெறவில்லை என இன்று காலை ஜனாதிபதி ஊடக பிரிவு ஊடக அறிக்கை ஒன்றும் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Geen opmerkingen:
Een reactie posten