தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juni 2015

கடைசி நிமிடங்களில் நடேசனின் முக்கிய எஸ். எம்.எஸ்..! ஒபாமாவின் முக்கியஸ்தரிடமும் தொடர்பு! வெளிவரும், வெளிவராத உண்மைகள்!

சுதந்திரக் கட்சியின் 6 பேரைக் கொண்ட குழு, மஹிந்தவை சந்திக்கவுள்ளது
[ திங்கட்கிழமை, 22 யூன் 2015, 01:31.51 AM GMT ]
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு பேரைக் கொண்ட குழுவினர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்திக்கவுள்ளனர். எதிர்வரும் 24ம் திகதி இந்த சந்திப்பு நடத்தப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில் ஆறு பேரைக் கொண்ட இந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக் குழு நிறுவப்பட்டது.
ஏற்கனவே இந்தக் குழுவினர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்திருந்தனர்.
கடந்த வெள்ளிக்கிழமையும் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியுடன் விசேட சந்திப்பு ஒன்று நடத்தப்பட்டிருந்தது.
இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவுடன் 24ம் திகதி விரிவாக ஆறு பேர் அடங்கிய குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் ஜோன் செனவிரட்ன தலைமையில் இந்தக் குழு நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


கடைசி நிமிடங்களில் நடேசனின் முக்கிய எஸ். எம்.எஸ்..! ஒபாமாவின் முக்கியஸ்தரிடமும் தொடர்பு! வெளிவரும், வெளிவராத உண்மைகள்!
[ திங்கட்கிழமை, 22 யூன் 2015, 12:24.05 AM GMT ]
2009ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் புலிகளின் அரசியற் துறைப் பெறுப்பாளர் நடேசன் அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியது உண்மை, அனைத்துலக செயலக பொறுப்பாளர் கஸ்ரோவுடனும் கதைத்தேன், இவ்வாறு கூறுகிறார் ரூட் ரவி.. கதைத்தது என்ன.....?
2009 வெள்ளைக் கொடி விவகாரம் ஆறு ஆண்டுகளைக் கடந்தாலும் சில விடயங்கள் மர்மமாக உள்ளது, உலகறிந்த உண்மை.
அவற்றின் சில முக்கியமான சாட்சியங்களை லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் வெளிப்படுத்துகிறார் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரூட் ரவி.

Geen opmerkingen:

Een reactie posten