தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 22 juni 2015

ஆப்கான் நாடாளுமன்றத்தில் பாரிய தற்கொலைத் தாக்குதல்!

இந்தோனேசியாவில் அடுத்த மரண தண்டனை…..

இந்தோனேசியாவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை வழங்குவது சட்டமாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2005 ஆம் ஆண்டு, ஜகார்தா புறநகர் பகுதியில் போதை பொருட்களை விற்க முயன்றதாக கூறி பிரெஞ்சு நாட்டை சேர்ந்த செர்ஜே அட்லாய் கைது செய்யப்பட்டார்.
அவர் மீதான வழக்கு விசாரணையின் முடிவில், செர்ஜேவுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதையடுத்து அந்நாட்டு அதிபருக்கு செர்ஜே சார்பில் கருணை மனு அளிக்கப்பட்டது. ஆனால் அம்மனு அதிபரால் நிராகரிக்கப்பட்டது. தனது கருணை மனு நிராகரிக்கப்பட்டதற்கு எதிராக நீதிமன்றத்தில் மீண்டும் மனு தாக்கல் செய்தார் செர்ஜே. அம்மனுவை விசாரித்த நீதிமன்றம் அதிபரின் முடிவை ரத்து செய்ய முடியாது என நேற்று தீர்ப்பு வழங்கியது.


இதையடுத்து விரைவில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மயூரன் சுகுமாறன் மற்றும் ஆன்ட்ரூ சான் ஆகியோருக்கும், பிரேசில் நாட்டை சேர்ந்தவருக்கும் அந்நாட்டில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.perans
http://www.jvpnews.com/srilanka/113499.html

ஆப்கான் நாடாளுமன்றத்தில் பாரிய தற்கொலைத் தாக்குதல்!

ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றத்தில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்துகொண்டிருக்கிறது. முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வெளியே கார் குண்டு வெடித்தது. அதைத்தொடர்ந்து துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய முயன்றனர்.
அவர்களை எதிர்த்த பாதுகாப்புபடையினர், துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்திற்குள் நுழைய மேற்கொண்ட முயற்சியை தாங்கள் முறியடித்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், துப்பாக்கிதாரிகள் நாடாளுமன்றத்துக்கு எதிரே கட்டிடவேலை நடந்துகொண்டிருக்கும் இடத்தை ஆக்ரமித்திருக்கிறார்கள். இருதரப்பாருக்கும் இடையில் சண்டைகள் தொடர்வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆப்கானிஸ்தானின் நாடாளுமன்றக்கட்டிடம் புகை சூழ்ந்து காணப்படுவதையும் அங்கிருந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவசர கதியில் வெளியேற்றப்படுவதையும் காட்டும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகிவருகின்றன.
ரொக்கெட் தாக்குதல்கள் மற்றும் கையெறி குண்டுத்தாக்குதல்கள் விட்டுவிட்டு நடந்தபடியே இருக்கின்றன.
இந்த தாக்குதலை தாங்கள் நடத்திவருவதாக தாலிபன் அமைப்பு உரிமை கோரியிருக்கிறது. ஆப்கானிஸ்தானின் புதிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவுக்கு ஒப்புதல் அளிக்கும் நாடாளுமன்ற வாக்கெடுப்புடன் தொடர்புடையதாக தமது இந்த தாக்குதல்களை திட்டமிட்டு நடத்தியதாக தாலிபன் அமைப்பு கூறியிருக்கிறது.
இந்த தாக்குதல்களில் பலர் காயமடைந்திருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல் ஆரம்பித்தது முதல் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பாகி வருகின்றன.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்தனர். மீட்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பாராளுமன்றத்தின் உள்ளேயும் வெளியேயும் 9 தடவை குண்டு வெடித்த சத்தம் கேட்டது. முதல் குண்டு பாராளுமன்றத்துக்கு வெளியே காரில் இருந்து வெடித்தது. அதை தொடர்ந்து பல இடங்களில் குண்டுகள் வெடித்தன.

இந்த தாக்குதலில் எம்.பி.க்கள் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என தெரிவித்தார்.Afghan_parliament 01
Afghan_parliament 02

Afghan_parliament
http://www.jvpnews.com/srilanka/113502.html

Geen opmerkingen:

Een reactie posten