எதிர்வரும் பொதுத்தேர்தலில் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளித்தலைவர் ஒருவர் போட்டியிடுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் சார்பில் போட்டியிட ரூபன் என்று அழைக்கப்படும் அமிர்தலிங்கம் ரவீந்திரா தமது விண்ணப்பத்தை சமர்ப்பித்துள்ளார்.
பெரும்பாலும் இது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கலாம்; என்று எதிர்ப்பார்க்கப்படுவதாக இந்திய நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.
2009ஆம் ஆண்டு இறுதிப்போருக்கு பின்னர் முன்னாள் விடுதலைப்புலி போராளிகளை சேர்த்துக்கொள்வதில் இலங்கை தமிழரசுக்கட்சி விலகியிருந்து வந்தது.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகள் முன்னாள் போராளிக்கட்சிகளாகும்.
இந்த நிலையில் ரூபன் பல வருடங்களாக மட்டக்களப்பு சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இவர் 1987ஆம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் பின்னர் விடுதலைப்புலிகளின் வடக்கு கிழக்கு இடைக்கால நிர்வாக சபையில் அங்கம் வகித்தவர். 1990ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவுடன் பேச்சு நடத்திய விடுதலைப்புலிகளின் குழுவில் இவரும் உள்ளடங்கியிருந்தார்.
இந்தநிலையில் தாம் நாடாளுமன்றத்துக்கு தெரிவானால் முன்னாள் போராளிகளுக்கும் தமிழ் மக்களுக்கும் சேவை செய்யப்போவதாக ரூபன் அறிவித்துள்ளார்.
ரூபன் இலங்கையின் நாடாளுமன்றத்துக்கு தெரிவுசெய்யப்பட்டால் இலங்கை நாடாளுமன்றத்துக்கு பொதுமக்களால் தெரிவான முதலாவது முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினராக இருப்பார்.
ஏற்கனவே கருணா என்ற விநாயகமூர்த்தி முரளிதரன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த போதும் அவர் தேசியப்பட்டியல் மூலமே நாடாளுமன்றத்துக்கு உள்வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmtyGRcSUeo6C.html
Geen opmerkingen:
Een reactie posten