தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 23 juni 2015

பேஸ் புக் மோகம்: பெற்றோரை பொலிஸ் நிலையம் வரை இழுத்துச் சென்ற இலங்கை மாணவி !

பேஸ் புக்கில் தற்போது அம்மா மார் பொழுதைப் போக்குவதை விட , மாணவிகளே பெரிதும் அடிமையாகி வருகிறார்கள். மேல் நாடுகளில் உள்ள மாணவிகள் பேஸ்புக்கில் தமனது ஆண் நண்பர்களோடு அரட்டை அடிப்பது போதாது என்று அரை நிர்வாணத்தில் நின்று படம் எடுத்து அதனையும் பகிர்ந்துகொள்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த வகையிலும் நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்று இலங்கை மாணவிகள் நிரூபிக்க முனைகிறார்களா என்று தெரியவில்லை. சமீபத்தில் கொழும்பு வெள்ளவத்தையில் வசித்துவரும் , மாணவி ஒருவர் தன்னை பெற்றோர் கண்டபடி அடித்து சித்திரவதை செய்துள்ளதாக பொலிசாரிடம் முறையிட்டுள்ளார்.
இதனை அடுத்து விசாரணை நடத்திய பொலிசாருக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. பேஸ் புக் மற்றும் லைவ் சட்டிங்கிற்கு அடிமையான இந்த மாணவியை , பெற்றோரால் கட்டுப்படுத்தவே முடியவில்லை. 6 மோபைல் போன்களில் அவர் வெவ்வேறு பேஸ் புக் கணக்குகளை திறந்து அட்ட டைமில் , ஆண்களோடு அரட்டை அடிப்பது வழக்கமாம். இதில் அவர் தனது ஆண் நண்பர்களுக்கு , தனது அரை நிர்வாண போட்டோக்களை அனுப்ப அவர்களும் ஜட்டியோடு நின்று எடுத்த புகைப்படங்களை பதிலுக்கு அனுப்புகிறார்கள். இதனை எதேட்சையாக பார்த்த தாய் அதிர்ந்துபோனார். காரணம் என்னவென்றால் இதுவரை காலமும் தனது மகள் சட்டிங்கில் தான் இருக்கிறார். அரட்டையடிக்கிறார் என்று தான் அவர் எண்ணிவந்துள்ளார். புகைப்படங்கள் பரிமாறிக்கொள்ளும் அளவு இதுபோகும் என்று அவர் சற்றும் எதிர்பார்க்கவில்லை.
இதனால் அவர் இரண்டு தட்டு தட்டி , மகளை ஒழுங்காக இருக்கும்படி கூறியுள்ளார். மேலும் தகப்பனார் கண்டித்தும் உள்ளார். இதனை அடுத்தே தன்னை அடித்து கொடுமைப் படுத்தியதாக அவர் பொலிஸ் நிலையத்தில் புகார் கூறியுள்ளார். நிலமையை பொலிசார் புரிந்துகொண்டாலும் விசாரிக்க வேண்டும் , வரும் 30ம் திகதி பொலிஸ் நிலையம் வருமாறு அவர்கள் பெற்றோருக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்கள். பேஸ் புக் அரட்டைக்காக பெற்ற தாய் மற்றும் தகப்பனை கம்பி எண்ணவைக்க நினக்கும் மாணவி .... காலம் கலிகாலம் ஆகிப்போச்சு டா...

Geen opmerkingen:

Een reactie posten